15/03/2021

திராவிடக் கொள்கை ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ எடுபடவில்லை...

கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர்.

கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர்..

இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர்.

உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்..

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்..

தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்..

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க...

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.

தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...

தமிழினத்தை கொன்ற திமுக - காங்கிரஸ் கூட்டணியை விழுத்துவோம்...

 


நர்சிங் படிப்பிற்கு நீட்டை அறிமுகப்படுத்தும் பாஜகவிற்கு கடும் கண்டனங்கள்...

பாஜகவிற்கு அடிமையாய் இருக்கும் அதிமுகவிற்கும் கடும் கண்டணங்கள்...

கன்னட பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் சாதி வெறியும்...

கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா -ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதான சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது.

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்..

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு

– வீரமணி...

திமுக - அதிமுக வை கழுவி கழுவி ஊற்றும் மக்கள்...

 


டாக்டர் Vs நான்...

 


ஒர் நாள் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டேன்...

டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க என்று...?

அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று...

உடனே நான் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு கூப்பிட்டு சென்றேன்.

டாக்டரும் என்னை நம்பி அவுருடைய காரில்  என் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தார்.

டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார், நோயாளி எங்கே...? என்று

அதற்கு நான் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பேன் யோசிக்குறீங்களா😁

நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர்  இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்...  என்றேன்...

டாக்டர்:........

யார்கிட்ட நாங்களா அப்பவே அப்படி😁😁😁

திமுக தெலுங்கர் ஸ்டாலின் Vs அதிமுக எடப்பாடி...

 


ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்...

அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார்.

காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது.

அப்போது ராவ்டிவ் நல்ல உடல் நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார்.

அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

திமுக வில் சீட் தராததால் பாஜக வில் இணைந்தார் MLA சரவணன்...

 


இணைந்தவுடன் பாஜக வேட்பாளராக அறிவித்தது பாஜக 😁

திராவிடம் ஆரியம் இரண்டும் ஒரே கொள்கை கொண்ட கட்சி... தமிழர்களுக்கு எதிரான கட்சி...

கன்னட பிராமண கமலும்... உருது இஸ்லாமிய SDPI கட்சியும்...