04/04/2021
நான் படித்த உளவியலில் இருந்து... ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்?
குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன்.
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
வாகனம் ஓட்டுதல்:
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம் பண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும்.
ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.
பேச்சு:
ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும், 20 சதவீத உடல் மொழியையும், 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். ஆண்கள் மூளையால் அவ்வாறு உணர முடியாது.
தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டு கொள்வார்கள்.
ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது... யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கி விடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு, வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.
மனம்:
வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது.
பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
ஞாபக சக்தி:
ஆண்களால் எதையும் அதிகம், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள், திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை.
ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால், ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்.
ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்...
திராவிடம் Vs தமிழர்கள்...
திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும் வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள் (தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.
தமிழர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள், பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும், அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கங்களே, அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும், அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது..
சிந்தித்துப் பார் தமிழா..
பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டம் உன்னை அடிமைப்படுத்த அடித்துக் கொள்கிறது...
சுண்ணாம்பு மருத்துவம்...
சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.
மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.
கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...












