15/05/2021

முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்...

 


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்' களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு...

பெட்ரோல், டீசலையும் மாநில அரசு நேரடியா வாங்கினால் என்ன.?

 


அமெரிக்கா தடுப்பூசி Vs இந்திய தடுப்பூசி...

 


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?

 


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்...

இந்திய மக்களின் முதல் எதிரியே நீ தான்...

 


பாராட்ட வேண்டிய விசயம்...

 


கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...

 


முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.

1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).

1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.

2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும் நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.

3). காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.

சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில் மனதை வைத்து தவம் செய்யும்போது கூடுவிட்டு கூடு பாயலாம்.

இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம். உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய்விட்டது.

யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.

பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.

விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.

எல்லாம் நன்மைக்கே...

திருமணம் ஆகாதவர்களுக்கான முக்கிய குறிப்பு...


 

அரசின் லட்சணம்...

 


பிராடு பாஜக மோடியின் பித்தலாட்டம்...