22/09/2021

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...

 


மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்..

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்...

பெரியாரிஸ்டுகளை செருப்பால் அடித்த பஞ்சாப் முதல்வர் 😁

 


ஒ... இதற்கு பெயர் தான் காதலா...

 




ஒரு நிமிடம்
நீ என்னை கடந்து
செல்லும் போது
எனக்கு இமைகள் இருப்பதை
மறந்து விடுகிறது கண்கள்...

சர்க்கரை நோய் குறைய வெந்தயம்...

 


வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெந்தயம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்  தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.

வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது.

வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது.

வயிற்றுப் போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.

வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்து விட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது.

பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது.

வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட  விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும் போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.

வெந்தயம் எடுத்துக் கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்று போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது  அதிகமாக காணப்படும்.

வெந்தயத்தை உணவாக பயன் படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்..

இப்படி பயன்படுத்தும் போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.

சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்..

இயற்கையாய் இயற்கையோடு வாழ.. இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..

ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்.. மனிதநேய விதைகளாய் மாறுவோம்...

பிராடு பய கடவுள்...

 


கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பாராம்...

ஆனால் நம்ம கதவுக்கு மட்டும்  சீல்  போட்டு திறக்காத மாதிரி வச்சிருப்பான்  போல..

பாஜக மோடி முதலாளி அதானி எனும் போதை பொருள் கடத்தல் மன்னன்...

 


பெலூசியும் போர் (Battle of Pelusium)...

 


எகிப்தியர்கள் பூனையை மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகவும் அது தங்களை பாது்காப்பதாகவும் எண்ணினர்.

எகிப்தில் பூனைகளுக்கு கோவில்களும் உண்டு அதை அவர்கள் கடவுளாக வணங்கினர்.

இதை புரிந்துகொண்ட பாரசீகர்கள் பெலூசியும் நகரத்தின் மீது போர் தொடுத்தபோது தங்களது கேடயத்தில் பூனைகளை கட்டிக்கொண்டு போரிட்டனர்.

பூனைகளை புனிதமாக எண்ணிய எகிப்தியர்கள் எதிர்தாக்குதல் செய்ய திண்டாடினர் இதனால் எகிப்தியர்கள் போரில் தோற்க்கடிககபட்டனர்.

இந்த போரில் பூனை ஒரு திருப்பு முனையாக அமைந்தது...

நீட் குறித்து நீதிபதி ராஜன்...

 


பஞ்சாப் வங்கியின் கொள்ளை...

 


இளநீர் நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...

 


ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.

இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.

வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும்.

விந்துவை அதிகரிக்கும்.

குடல் புழுக்களை அழிக்கிறது.

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...