17/06/2017

இலுமினாட்டி யும் தமிழர் நிலம் தொடர்பும்...


குமரிகண்டம் என்ற வார்த்தை தற்போது பிரபலமாகி விட்டதால் அங்கிருந்தே தொடங்குவோம்..

குமரிகண்டம் என்பது ஒரு பொய். ஏனெனில் அது ஆயிரம் தீவுகள் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு தான் கண்டம் அல்ல...

ஆனால் தற்போதுள்ள..

காவிரி - வைகை - தாமிரபரனி

போன்ற ஆற்றை ஒட்டிய நாகரீகத்தை போலவே இதே வரிசையில்..

குமரியாறு - பஃறுளி

ஆறு போன்ற ஆறுகளும் அந்த ஆற்றில் நாகரிகமும் உருவாகி செழித்து இருந்தது. ஆதியில் அங்கிருந்து தான் கடல் வணிகம் மேற்கொள்ளப்பட்டது.
நாகரிகம் என்பது ஏதோ பரிமாண வளர்ச்சி என்று நினைப்பது தவறு.

நாகரிகம் என்பது அடிமைகளை வைத்து தான் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டது என்பது உலகவரலாறு.

எஃகா எகிப்து மாயன் நாகரிகங்கள்..

அந்த அடிமைகள் யார் எனில் காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளை பிடித்து வந்து அடிமைகள் ஆக்குவது...


இது தான் உலகம் முழுக்க நடந்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கிறது.

ஆனால்  தமிழ்நாட்டில் மட்டும் இது இயற்கையாகவே நடந்தது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நாகரிகத்தை உருவாக்கியவன் வெளியில் இருந்து வந்தவன்.. நம் பழங்குடி மக்கள் அதுவரை அறிந்திராத இதுபோன்ற கொடுமைகளை  நிகழ்த்தி தினைசார் பழங்குடிகளாக இருந்த மக்களை நெல்நாகரீக அடிமைகளாக பிடித்து வந்தனர்.

நெல்நாகரீகத்திற்கு தேவையான குளங்களையும் ஏரிகளையும் வெட்ட பழங்குடிகளை பயண்படுத்தினர்.

அந்த வெட்டி என்ற குளம் வெட்டும் வேலையை  தான். இன்றுவரை மக்கள் வெட்டிவேலை என வீணான என்ற அர்த்ததில் உபயோகப்படுத்துகிறார்கள்.

அந்த நாகரிகத்தை உருவாக்கியவர்களுக்கு தேவை வயல்நிலங்கள் தான். அதனால் தான் மருதநில நெய்தல்நில முல்லைநில பழங்குடிகளை பயண்படுத்தினார்கள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்..  மருதநிலம்..

மருதநிலம் என்பது இப்போது தான் வயலும் வயல்சார்ந்த நிலமும்..


ஆனால்  தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில் மருதநிலகாடுகளை பற்றி ஒரு அருமையான வர்ணனை வருகிறது.

ஒரு குரங்கு மருதநில காட்டில் வரிசையா பல மரங்களின் மீது பயணிப்பதாக..

இதன் மூலம் மருதநிலம் என்பது நெல்நாகரீகம் சார்ந்ததாக இல்லை என்பது தெளிவாக புரியும்...

இங்கே நெல்நாகரீகத்தை  உருவாக்கிய அதே பெண்வழி அரசகுடும்பம் பல நாடுகளிலும் அதே நேரத்தில் நாகரிகத்தை உருவாக்கியது.

அடுத்து நாகரிகம் உருவாக்கப்பட்ட இடங்கள் எல்லாம் தமிழ் மொழி   சென்றிருக்கிறதே அது எப்படி ?

அந்த இலக்கணத் தமிழை உருவாக்கியது யார் ?

என அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.