06/11/2017

ஆஸ்திரேலியாவைக் கலக்கும் தமிழ் மாணவர்...



மெல்பர்னைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் அனிருத் கதிர்வேல்… ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ‘Spell Bee’ போட்டியில் வெற்றி பெற்றவர்..

பொதுமக்கள் புழக்கத்திற்கான போக்குவரத்து வாகனங்களில் நின்று கொண்டு பயணம் செய்ய இயலாதவர்களுக்கு உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவர்களில் விருப்பப்பட்டு இருக்கையை தர முன் வருபவர்களுக்காக ஒரு பேட்ஜ் தயாரித்து இலவசமாகத் தந்து கொண்டிருக்கிறார்.

2015-ம் ஆண்டு ‘Spell Bee’ போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தனது 9-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அனிருத் அங்குள்ள குழந்தைகள் மருத்துவமனை நல நிதிக்காக நிதி திரட்டி நன்கொடை அளித்தார்.

இந்த ஆண்டு 10-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

லண்டன் மாநகரப் பேருந்துகளில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ‘எங்களுக்கு உங்கள் இருக்கையைத் தந்து உதவ முடியுமா?’ என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு வருவார்கள். ஆனால் அப்படி ஒரு பேட்ஜ் அணிய பெரும்பாலானோர் விரும்புவதில்லை. பதிலாக இருக்கையைத் தந்து உதவ விரும்புகிறவர்கள் அப்படி ஒரு பேட்ஜ் அணிந்து கொண்டால் இன்னும் அதிகப் பயனளிக்குமே என்று எண்ணினேன். நான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அப்படி பேட்ஜ் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது இதைக் கேள்விப்பட்டு நிறையப் பேர் அப்படி பேட்ஜ் தயாரிப்பதற்கும் விநியோகம் செய்வதற்கும் உதவ முன்வந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார் அனிருத்.

நல்ல விஷயம். வாழ்த்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.