25/12/2017

டொக் என்ற ஒற்றைத்துளி ஒன்று குழாயிலிருந்து கீழே விழும். உடனே Background -ல் ஒரு குரல் இவ்வாறு பேசும். தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலைமதிப்பற்றது என்று...


இந்த எண்ணம் உங்களது ஆழ்மனதில் பதிந்தால்தானே இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் தண்ணீரை எவ்வளவு விலைக்கு விற்றாலும் மறுக்காமல் அதைக் காசுகொடுத்து வாங்குவீர்கள்.

தங்கத்தையும் இப்படித்தானே உங்களை நம்பவைத்து வாங்கவைத்தோம் எனில் இது ஒன்றும் எங்களுக்கு பெரிய காரியமில்லை.

உலகத்தில் 3-ல் 2-பங்கு நிலப்பரப்பு உப்பு நீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது என்று உங்களுக்கு சொன்னோம்.

அந்த கடலின் பாதிக்கும் அதிகமான நீர் ஆவியாக காற்றில் கலந்திருப்பதை உங்களுக்கு சொல்ல மறுத்தோம்.

கடல்நீருக்கு சமமான நன்னீர் உலகத்தில் உள்ளதெனும் உண்மையை உம்மிடம் மறைத்தோம்.

மக்கள் தொகைப் பெருக்கமே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கதை விட்டோம். இவ்வளவும் எதற்காக செய்தோம்?

ஏனென்றால் நாங்கள் வணிகர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.