09/02/2018

தமிழ்நாடு காவல்துறை என்று வெளியில் சொல்லிராதீங்க... காரி துப்புவாங்க.....


அரபுநாடுகளில், குறிப்பாக  துபாயில், கார் ஓட்டும் போது சிறிய அளவில் விபத்து ஏற்படுத்துதல், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, இது போன்ற வாகன குற்றங்கள் செய்தால், அங்குள்ள காவல்துறை ஓட்டுனரை பிடித்தால், காரை விட்டு நாம் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. அந்த காவல்துறை அதிகாரியே ஓட்டுனரிடம் வந்து ஓட்டுனர் உரிமம், கார் உரிமம் அவைகளை பெற்று சென்று, அபராதத்திற்குரிய ரசீதை தருவார்.
 
அப்படியே நாமே இறங்கி சென்று, அந்த காவல்துறையினரின் வாகனத்திற்கு சென்று ஆவணங்களை கொடுத்தாலும், அவற்றை வாங்கி கொண்டு, நமது காரில் சென்று அமர்ந்து இருக்குமாறு கூறுவார்கள்.

ஏன் துரை இறங்கி வர மாடீன்களோ?
அய்யா கூப்பிடுறாரு, அங்க போயி பாரு. போன்ற இளக்காரமான பேச்சோ, தரக்குறைவான நடவடிக்கையோ கண்டிப்பாக இருக்காது.

ஆனால், அதையும் தாண்டி, அடி, உதை என்ற ரேஞ்சுக்கும் தமிழக காவல்துறையினர் செல்கிறார்கள் என்றால். எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்கவில்லை என்ற கோபமே அதற்கு காரணமாக இருக்கும்.

ஒருவன் தற்கொலை அளவுக்கு செல்கிறான் என்றால், எந்த அளவிற்கு அவன் நடத்த பட்டு இருப்பான் என்றும் யோசிக்க வேண்டும்.
 
காவல்துறை உங்கள் நண்பன் என்று எழுதினால் மட்டும் போதாது.

அடிதட்டுமக்களிடம் அதிகாரம் காட்டுவது, அதிகார வர்க்கத்திடம்  அடி பணிந்து செல்வது என்பது வாடிக்கையாக போய்விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.