06/03/2018

ஆக இறுதியாக விவசாயத்திற்கு கழிவுநீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்...


அரசுகள் முறையாக செயல்பட்டு நமக்கான நீர்ப்பங்கீடினைப் பெற்றுத்தராமல் மாற்று சிந்தனை என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களை அடிமுட்டாளாக்கி திசைதிருப்பும் ஒரு முயற்சியே.

இதிலிருந்து நமக்கான அரசுகள் கூற வருவது என்னவென்றால் இனி ஒருபோதும் உங்களுக்கு தண்ணீர் கிடையாது. தண்ணீர் என்பது ஒரு விலைபொருள் அவை நிறுவனங்களுக்கானவை.

இனியேனும் மக்கள் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அடையாவிட்டால் நிச்சயம் அது நடந்தேவிடும்...

ஆம்.... அடுத்ததாக "கழிவுநீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டம்"....

பின்குறிப்பு - கழிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் என்ன தவறு என்று யாராவது வந்து கம்பு சுத்தினால் நிச்சயம் காரித்துப்புவேன்...

- Kaliyappan Srinivasan

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.