23/04/2018

கிராம தேவதைகள்...


கிராமங்களில் வேலிகள், புதர்கள் பனந் தோப்புகள் போன்றவை சாதாரணமாகக் காணப்படும்.

இவை இரவு நேரங்களில் இருள்மிகுந்து காட்சியளிக்கும்.

வேலி ஓரங்களில் கறுப்பு உருவங்கள் பெரும்பாலும் பெண்கள் தலைவிரி கோலமாகச் செல்வது போல் மறைந்து மறைந்து செல்வதைக் கிராம மங்கள் பார்த்திருக்கின்றனர்.

அனுபவம்மிக்க அகவை முதிர்ந்த கிராமப் பெரியவர்கள் இவை அமாவாசை அஸ்டமி நள்ளிரவில் தவறாமல் தென்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

இந்தப் பேய்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.

இவற்றை நிறைவேறாத ஆசைகளுடன் மரணமடைந்த ஆவிகள் என்று கூற முடியாது.இதனை கிராம தேவதைகள் என்று சிலர் கூறுகிறார்கள்.

இவற்றில் கறுப்பு உடையில் பயங்கரத் தோற்றமளிக்கும் பெண் தேவதைகளுக்கு பொதுவாக கிராமங்களில் கோயில்கள் உள்ளன.

பலர் வீட்டின் தோட்டப்பகுதிகளில் இதற்கு ஆண்டிற்கு ஒருமுறை வழிபாடு செய்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.