02/06/2018

செத்தாலும் பரவாயில்லை சுத்தமான காற்று வேண்டும் என துப்பாக்கியின் முன்கூட நின்று போராட ஏன் தூத்துக்குடி மக்கள் தயாரானார்கள்?


இது உண்மையான மக்கள் போராட்டமல்ல தூண்டிவிடப்பட்ட சதி என்று பேசுபவர்களுக்காக கீழ்க்கண்ட ஆதாரம்.

கடந்த பத்து வருடங்களில் வெறும் 10% மட்டும் தூத்துக்குடியில் ஜனத்தொகை  வளர்ந்திருக்கிறது. ஆனால் காற்றுமாசு தமிழகத்திலேயே மிக அதிகமாக இந்த பத்து ஆண்டுகளில் வளர்ந்திருப்பது தூத்துக்குடியில்தான்!!

இன்னும் நில மாசு நிலத்தடிநீர் மாசு மேற்புற நீர்மாசு கடல் மாசு இதெல்லாம் இருக்கிறது.

காற்று மாசு என்று வரும்போது மிக முக்கியமான ஒரு விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடற்கரை ஓர நிலப்பகுதியின் காற்றுமாசு பெரிய அளவில் கடலை நோக்கிப் போய்விடும். ஆகவே பெரும்பாலும் கடற்கரையோர சென்னை போன்ற நகரங்கள் காற்றுமாசு அதிகமாக உள்ள பட்டியலில் முதலிடம் பெறுவது இல்லை.

தூத்துக்குடி ஒரு கடற்கரை நகரமாக இருந்தபோதிலும் அது தமிழகத்தில் காற்றுமாசில் முதல் இடம் பிடிக்கிறதென்றால் அங்கே ஏற்படும் காற்றுமாசின் அளவு கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாததாக மட்டுமே இருக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.