விமானத் தயாரிப்பில் பெரும் அனுபவம் கொண்ட ஹெச்ஏஎல் நிறுவனத்தைத் தவிர்த்துவிட்டு, அனுபவமே இல்லாத வாராக்கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கும், ரூ.1.21 லட்சம் கோடி கடன் கொண்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.30,000 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது ஏன் என்ற கேள்விதான் மோடி அரசை இன்று எதிர்க்கட்சிகள் துளைத்தெடுக்கும் கேள்வி.
அம்பானிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பைத்தான் எதிர்க்கட்சிகள் வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றன.
ரபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசு எங்கெல்லாம் தள்ளாடியிருக்கிறது என்பதை பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மூவர் கூட்டணி புட்டுபுட்டு வைக்கிறது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இவர்களின் வாதங்கள் வலுசேர்க்கின்றன. இவர்களில் அருண் ஷோரியும், யஷ்வந்த் சின்ஹாவும் முந்தைய பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://tamil.thehindu.com/opinion/columns/article25025491.ece

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.