11/12/2018

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை விற்பனை : 3 பேர் கைது...


திருச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்த பெண் குழந்தையை விற்றதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே, செல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரேமா. கர்ப்பமாக இருந்த இவர், திருச்சி மாவட்டம், உப்பிலிய புரத்தில் உள்ள, உறவினர் வெள்ளையம்மாள் என்பவர் வீட்டுக்கு, பிரசவத்துக்காக வந்திருந்தார்.

ஒரு லட்சம்...

உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமாவுக்கு, சில நாட்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்துள்ளது.பிரேமாவின் உறவினர் வெள்ளையம்மாள், கிராம சுகாதார செவிலியரின் உதவியாளர், சுசீலாதேவி ஆகியோர், துறையூர் அருகே, அமுதசுரபி நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் சகுந்தலா தம்பதிக்கு, குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளனர்.

மீட்டனர்...

இது குறித்து தகவல் அறிந்த, திருச்சியில் உள்ள குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த, தியாகராஜன் என்பவர், கடந்த, 7 ம் தேதி, உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி விசாரணை நடத்திய, முசிறி போலீசார், சகுந்தலாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக, வெள்ளையம்மாள், சுசீலாதேவி மற்றும் சகுந்தலா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.