01/03/2019

பட்டை சோறு...


நம் தலைமுறையில்.. வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்.. பட்டை சோறு உண்பது..

நிலைவெள்ளி (ever silver) பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண.. உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..

தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டு வரப்படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது.. அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி..

மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி. குழி ஏற்படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்..

இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி கரண்டியாகச் செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்

இதில் சாப்பிடும்போது.. ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும்.. அதிக உணவு சாப்பிட தோன்றும்..

பனையோலை செய்த பிளாவில் கள், கருப்பநீர், கூழ், கஞ்சி என்பன குடிக்கப் பயன்படும்.

பனையோலையால் செய்த குடலையில் ஆட்டு இறைச்சிப் பங்கு பொதி செய்து கொடுப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.