10/03/2019

மீன்களும் பெருமைக்காக வேட்டையாடும்...


மீன்களின் பெரியது எது என்று கேட்டால் திமிங்கலம் என்று தான் அத்தனைபேரும் சொல்வார்கள். ஆனால் எலும்புள்ள மீன் வகைகளில் பெரியது என்று கேட்டால் மோலா மோலா மீன்கள் அந்த இடத்தை பிடிக்கின்றன.

இந்த மீன்கள் மிதமான வெப்ப மண்டலம் கொண்ட கடல்களில் தான் காண முடியும். இந்த மீன் வகைகள் 11 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் எலும்பு மனித எலும்பு மாதிரி உறுதியானவை.

இந்த மீனின் விருப்ப உணவு குடை போன்ற உடல் உடைய இழுது மீன்   (Jellyfish) தான். ஆனால் இந்த மோலா மோலா மீன்களோ கடல் சிங்கத்துக்கு விருப்ப உணவாகி விடுகிறது.

இரைக்காக இவற்றை கடல் சிங்கங்கள் வேட்டையாடினால் கூட பரவாயில்லை. பல நேரங்களில் தானொரு பெரிய வேட்டைக்காரன் என்ற நினைப்பில் இந்த மீன்களை பார்த்ததும் பெருமைக்காவது வேட்டையாட தொடங்கி விடுகிறது.

இதனால் இந்த மோலா மோலா மீன்களின் எண்ணிக்கையே குறைந்து போய்விட்டது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால் இதன் துடுப்பு சுறா மீனின் துடுப்பு போல் இருக்கும். இதனால் இவை வலம் வரும்போது துடுப்பு மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரியும்.

அப்போது மீன் பிடிப்பவர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள் சுறா மீனோ என்று அஞ்சுவதும் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.