31/03/2019

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்...


சரவண பவனில் வேலை பார்த்த ஊழியரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபாலுக்கு (அண்ணாச்சி) ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

1990களின் இறுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் ஓட்டல் சரவண பவனில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி ஜீவஜோதி, கணவரைக் காண சரவண பவனுக்கு வருவார் எனவும் அப்போது அண்ணாச்சிக்கு ஜீவஜோதி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஜீவஜோதியை அடைவதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. ஜீவஜோதி இதுதொடர்பாகப் புகார் அளித்தார். இந்த வழக்கில் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்பீலில் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த ராஜகோபால் பெயிலில் வெளியில் இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சரவண பவன் நிறுவனர் பி.ராஜகோபால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.