13/03/2019

ஏழு கட்ட தேர்தலின் டைம் டேபிள் பார்த்தால் ஏகப்பட்ட சந்தேகங்கள் கிளம்புகின்றன...


1 ) உ.பி, மே.வங்கம், பிகார் மூன்றுக்கும் ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 80 தொகுதிகள் உ.பி என்பதால் (அதுவே benefit of doubt தான்) ஏற்றுக் கொள்ளலாம். மே. வங்கம், பீகாருக்கு எதற்கு ஏழு அடுக்குகள்? பீகார் (40), மே. வங்கம் (42) அதிக பட்சம் 2 அல்லது 3 அடுக்குகளுக்கு மேல் இங்கே என்ன தேவை இருக்கிறது?

2 ) தென் மாநிலங்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு தடவையாக தேர்தல் நடக்கிறது - கர்நாடகா தவிர. கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்கு வங்கி இருப்பதால் மட்டுமே இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறதா? அப்போது தான் மோடி பிரச்சாரத்துக்கு வந்து விட்டு போக முடியுமா? 39 தொகுதிகள் இருக்கக் கூடிய தமிழகம்,  25 தொகுதிகள் இருக்கக் கூடிய சீமாந்திரா என ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கும் போது 28 தொகுதிகள் இருக்கும் கர்நாடகாவிற்கு மட்டும் எதற்கு இரண்டு கட்ட தேர்தல்?

3 ) காங்கிரஸ் சமீபத்தில் வென்ற மூன்று மாநிலங்களிலும் (ம.பி, ராஜஸ்தான், சத்திஸ்கர்) பல கட்ட தேர்தல்கள் நடக்கின்றன.
சத்தீஸ்கர் - 3 கட்டம்
மத்திய பிரதேசம் - 4 கட்டம்
ராஜஸ்தான் - 2 கட்டம்

இத்தனைக்கும் உ.பி, பீகார் அளவிற்கு கூட இங்கெல்லாம் தொகுதிகள் கிடையாது. என்ன லாஜிக் இது?

4 ) ஜம்மு & கஷ்மீரில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆனால் இடைத்தேர்தலை தமிழ்நாட்டில் அறிவிக்கும் தேர்தல் ஆணையம், ஜம்மு & கஷ்மீரின் மாநிலத் தேர்தலை நிராகரிக்கிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் என்ன சொல்ல வருகிறது? ஜம்மு & கஷ்மீர் மக்கள் எம்.பிக்களை தேர்ந்தெடுப்பார்கள், ஆனால் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்க தகுதியற்றவர்களா?

5 ) 48 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்ட்ராவுக்கும், 21 தொகுதிகள் இருக்கும் ஒடிசாவுக்கும் ஒரே மாதிரியான 4 கட்ட தேர்தல்கள். மலைவாழ் பிரதேசங்களில் பல்வேறு கட்ட தேர்தல்கள் என்பதில் நியாயமிருக்கிறது (அசாம் 3 / ஜார்கண்ட் 4) மகாராஷ்ட்ராவில் நான்கு கட்ட தேர்தல் நடத்த வேண்டிய அவசியமென்ன??

எதிர்க்கட்சிகளும், பாஜக எதிரணிகளும் மிக கவனமாக அணுக வேண்டிய தேர்தல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நேரம் குறைவு. வேலைகள் அதிகம். பாசிட்டிவாய் அணுகி, பாசிசத்தை வீழ்த்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.