05/03/2019


'மன்னா'(Manna) என அழைக்கப்படுவது. விண்ணிலிருந்து பொழிந்த ஒரு மர்மமான உணவுப்பொருளாகும், இது கடவுளால் அனுப்பப்பட்டு, யாத்திராகமத்தின் கடைசி நாற்பது வருட காலப்பகுதியில் பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, ​​அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் சினாய் பாலைவனத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறைய இஸ்ரவேலர்கள் வேறு இருந்தனர், இந்த கட்டத்தில், மக்கள் பட்டினியால் மடிவதை தடுப்பதற்காக, கடவுள் மன்னாவை பரலோகத்திலிருந்து பூமியில் அனுப்பினார். வெள்ளிக்கிழமை தவிர, ஒவ்வொரு நாளும் உணவை வழங்கினார்.

யாத்திராகமத்தின் விவிலியத்தில் கூறப்படுகிறது, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பனி தோன்றி மறைந்து, சூரியன் உஷ்ணத்தை உறிஞ்சுவதற்கு முன்பு அதை சேகரிக்க வேண்டும். அது தேனோடு தயாரிக்கப்பட்ட பாசியை போல் இருக்கிறது. எனவே இதுக டவுள் அனுப்பிய ஒரு உணவு இருந்தது. ஆனால் அது என்னவென்று சரியாக தெரியவில்லை.

ஆனால் சதி கோட்பாட்டாளர்கள்: இந்த மர்மமான உணவு ஆதாரத்தைப் பற்றி யுதர்களின் புனித நூல்களான #சோஹார் #தோரா மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #மாய_கஸ்பலா ஆகியவற்றில் விளக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நூல்களில் அந்த உணவை வழங்கிய கடவுளை வர்ணிக்கும் போது பல்வேறு அளவிலான மூளை, வெவ்வேறு அளவிலான முகங்கள் மற்றும் வெவ்வேறு ஒளி ஆதாரங்களுடன் இணைந்த வெவ்வேறு அளவிலான உடல் உறுப்புகள் என்றே விவரிக்கிறது.

இது கடவுள் பற்றிய ஒரு விளக்கமாக இருக்கிறது என்று போதித்த போதிலும்கூட, பண்டைய விண்வெளித் தத்துவவாதிகள், நவீன கண்ணோட்டத்தில், இது ஒரு கடவுள் உருவம் அல்ல, மாறாக இது ஒரு வகை இயந்திரம் என்று வாதிடுகின்றனர்: இவற்றில் மன்னா உணவு ஒரு கடவுளிடமிருந்து வந்த உணவு என்பதை விட, அது ஒரு இயந்திரம் உருவாக்கம் என்றே கூறுகின்றனர்.

மேலும் இந்த இயந்திரம் இஸ்ரேலியர்கள் எங்கிருந்து வந்ததது என்பதற்கான  விளக்கங்களை சதி ஆலோசனை வெளிப்பாட்டாளர்கள் குழு அளிக்கின்றன. எகிப்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அதை அவர்களிடமிருந்து யூதர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த இயந்திரம் எகிப்தியர்களுக்கு எப்படி கிடைத்தது.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, #அக்னேடென் Akhenaten (மன்னன் டட்ஸ் தந்தை) மோசேயின் போதனையாளராக இருந்தார், அது பற்றி Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த  அக்னேடென் மன்னன், வெளித்தோற்றம் மற்றும் பிரமிட் உருவாக்கத்தினால், அன்றைய எகிப்து மக்கள் அனைவரும் இவரை ஒரு வேற்றுகிரகவாசியே என்றே சந்தேகித்தனர்.

அவர் ஒரு விண்கலம் வைத்திருந்ததாகவும், மக்களின் கண்ணிலிருந்து மறையக்கூடிய அந்த விண்கலத்தினுள் உள்ள ஒரு இயந்திரத்தின் மூலம் பாலைவனத்தில் மழை பொழியச்செய்ததாகவும், செங்கடலையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த விண்கலம், ஒரு நகரும் மேகம் என்றே பைபிளில் விவரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மன்னா உணவும் அதிலிருந்து ஒரு கருவியின் மூலம் வெளியிடப்பட்டது என்றும். அந்த இயந்திரத்தையே இஸ்ரேலியர்கள் அபகரித்து சென்றதாக Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் மன்னா இயந்திரம்: உடன்படிக்கை பேழையில் உண்டாகும் அணுக்கரு ஆற்றலை மையமாகக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பதத்தை, ஒருவித உண்ணத்தகுந்த பாசிகளாக மாற்றியதாக கூறப்படுகிறது. யூதர்கள் இஸ்ரவேலை அடைந்தபோது, ​​மன்னா இயந்திரம் உணவை வழங்குவதற்கு இனி தேவைப்படாது என்று உணர்ந்து, சாலமன் ஆலயத்தில் உள்ள பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.