11/07/2020

டெல்லி - இரக்கமற்ற மனித மிருகங்கள்...


கொரோனா அறிகுறியுடன் பயணம் - பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழப்பு..

டெல்லியின் நொய்டாவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகோஹாபாத்துக்கு  19 வயது இளம்பெண் அன்சிகா யாதவ், தனது தாயாருடன் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பேருந்தில் இருந்து இறங்க வேண்டும் என சகபயணிகள் கூச்சலிட்டு உள்ளனர்.

இதையடுத்து அன்சிகாவை போர்வையில் சுற்றி நடத்துனரும் ஓட்டுனரும் கீழே தள்ளியதாக தெரிகிறது. அப்போது அவரின் தாயார் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத இருவரும் தாய், மகளை வெளியில் பிடித்து தள்ளியுள்ளனர். அனல் காற்று வீசிய அந்தச் சாலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர் இயற்கையாக உயிரிழந்தார் என காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடத்துனரும் ஓட்டுனரும் அன்சிகாவை கீழே தள்ளியதால் அதில் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சட்டியுள்ளனர்.

வழக்கு பதிவு செய்ய மதுரா போலீஸை அணுகியதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர், ஆனால் அது மரணத்திற்கான 'இயற்கை காரணங்களை' சுட்டிக்காட்டி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 'இதயத் தடுப்பு' மரணத்திற்கு ஒரு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த விஷயத்தை ஆராய எஸ்.பி. (கிராமப்புற) ஸ்ரீஷ் சந்திராவிடம் கேட்டுள்ளேன்" என்று மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் கூறினார்.

இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அன்சிகாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.