15/08/2020

பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவிப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு...



என்ன தண்டனை என்பது தொடர்பான விவாதம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும்...

பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்தது. அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்த விவாதம் ஆகஸ்ட் 20-ல் நடைபெற இருக்கிறது.

இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர், பிரசாந்த் பூஷன். இவர் கடந்த ஜூன் 27-ம் தேதி உச்சநீதிமன்றம் தொடர்பான ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். உச்ச நீதிமன்ற தமைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே குறித்தும் ஜூலை 22-ம் தேதி பதிவிட்டிருந்தார்.

இவற்றை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்காக பதிவு செய்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இன்று இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். அவருக்கு என்ன தண்டனை என்பது தொடர்பான விவாதம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என்றும், குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசாந்த் பூஷன் தனது கருத்தை பதிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேற்படி குற்றப் பிரிவுகளுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட சட்டத்தில் இடம் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.