21/10/2020

ஆன்லைன் சூதாட்டம்...

 


ஒரு நடிகை , நடிகன் "ஆன்லைன்ல ரம்மி விளையாடுங்க.."ன்னு விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க..

 இன்னொரு விளம்பரம், இரண்டு பொண்ணுங்க, இரண்டு பசங்க உட்காந்துருக்காங்க. அதுல ஒருத்தன், "நான் ஆன்லைன ரம்மி விளையாடும் போது தான் இந்த பொண்ண பாத்தேன். இப்ப நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். அதே மாதிரி என் ப்ரெண்டும் அவன் லவ்வரும் இவங்க"ன்னு பேசிட்டு இருந்தான்..

இது எல்லாமே காசு கட்டி விளையாடும் விளையாட்டுகள் தான். ஒரு வகைல உங்கள இதுக்கு அடிமையாக்குற தன்மை (Addiction) உண்டு.

இன்று படிச்ச ஒரு செய்தி.. புதுச்சேரியில் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி 30 லட்சம் கடனாளி ஆகி மன அழுத்தத்தில் தீக்குளித்து இறந்துள்ளார்.. இந்த மாதிரி ஆன்லைன் சூதாட்டத்துல விளையாண்டு, கொஞ்சம் காசு ஜெயிச்சதும், "அட இதுலையே நிறைய சம்பாதிக்கலாம் போலையே"னு மேலும் மேலும் விளையாண்டு,  கடைசில கடன் கழுத்தை நெறிக்கவும், தற்கொலை செய்து கொண்டார்..

இப்ப இதுக்கு கூத்தாடிகளா பொறுப்பேத்துக்க போறாங்க?? இல்ல இந்த சூதாட்டத்த நடத்துறவன அரசு சட்டம் தண்டிக்கப் போகுதா?

இதுல என்ன காமெடின்னா, நமக்கு எதிரா விளையாடுறது மனுஷனான்னு கூட நமக்கு தெரியாது.இதுல தான் நம்மாளுங்களும் ஏமாந்து காசையும் உயிரையும் உடுறாங்க.

திண்னைல உட்காந்து சூதாடுனா குத்தம், போலீஸ் புடிக்கும். லாட்டரி சீட்டு வாங்குனா கைது சிறை எல்லாம் போடுவாங்க.

அதோ செல்போன்ல ஆடுனா குத்தம் இல்லை.. செத்தா அதுக்கு யாரும் பொருப்பும் இல்ல ?!என்னங்க இது சட்டம்? பெரிய கம்பெனி நடத்தினா அது சூதாட்டம் இல்லையா?

சிந்தித்து பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.