08/10/2020

தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்...

 


உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு.

நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில்.

இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் இந்திய துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம்...

ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர்  முதல் தமிழ் ஈழ விடுதலைப்  புலிகள் வரைதான்.

அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.

நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.

நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.

பருவ  மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன் காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.

தமிழிற்கும், தமிழனுக்கும்  மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.

இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.

தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.

நாம் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்த காலம் போய், நாம் இன்று பலரிடம் தஞ்சம் புகும் காலமாகி விட்டது. வருத்தம் தான்.

தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.

எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும்.

௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.

காலத்தின் கொடுமை...

மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.

அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.

பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.