05/11/2020

6 விமான நிலையங்களை 6 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு வெறும் ஆயிரம் கோடிக்கு அதானிக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் மோடி ?

2019-20 ஆம் ஆண்டுகளில் மோடி அரசு லக்னோ விமான நிலையத்தை சீரமைக்க செலவழித்த தொகை கிட்டத்தட்ட ஆயிரத்து 1400 கோடிகள்..இதே காலகட்டத்தில் அகமதாபாத் விமான நிலையத்தை விரிவாக்கம் 1300 கோடிகளும் , ஜெய்ப்பூர் விமான நிலையத்தை விரிவாக்க 1,100 கோடிகளும் குவகாத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 1,230 கோடிகளும் திருவனந்தபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் சுமார் 600 கோடிகளும் , மங்களூர் விமான நிலையத்தை விரிவாக்கம் 132 கோடிகளும் என இந்த ஆறு விமான நிலையங்களில் விரிவாக்கம் செய்ய மட்டும் அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு செலவிட ஒதுக்கிய தொகை மட்டும் சுமார் 6 ஆயிரம் கோடிகள் அப்படியானால் இந்த விமான நிலைய உள் கட்டமைப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றிற்கான இத்தனை ஆண்டுகளில் இந்திய அரசால் செலவிடப்பட்ட தொகை எத்தனை ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்...

இப்பேர்ப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட இந்த 6 விமான நிலையங்களை மோடி அரசு தனது நண்பர் அதானிக்கு கொடுத்துள்ள  தொகை வெறும் ஆயிரம் கோடிகள் அதுவும் சுமார் 50 ஆண்டுகள் குத்தகைக்கு. எது எப்படியோ நாட்டின் பொதுத்துறை சொத்துக்கள் அதாவது மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை எல்லாம் தனக்கு உதவிய நண்பர்களான அதானி , அம்பானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க மோடியால் மட்டும்தான் முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.