01/11/2020

தற்சார்பு வாழ்வியல் முறை...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த நிலம். அந்த நிலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் உழைக்க வேண்டும்.

அந்தந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள வயதான மூத்தார்களை மட்டும் ஒரு கட்டத்தில் உழைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு கணக்கு வழக்கு, நிர்வாகம், கல்வியளித்தல் போன்ற பொறுப்புக்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு தொழில் நிறுவனம் போல செயல்பட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும்.

தேவைக்கு மிஞ்சியதை ஊர் வார சந்தைக்கு கொண்டு போய் விற்றுவிட்டு மாற்றுப் பொருட்களை வாங்கி வரலாம்.

நெய்தல் திணையினரும் சொந்த நிலங்களை வைத்துக் கொண்டு நீண்டகால பயிர்களான தென்னை, சவுக்கு போன்ற பயிர்களை வளர்த்துவிட்டு மீன்பிடித் தொழிலை மட்டும் பிரதானமான தொழிலாக வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரே சீரான அளவு கொண்ட நிலங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் மூலம் மானாவாரி மருதநில கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு சாதிவாரி நால்வர்ண பகுப்பிற்கான அவசியமே இல்லாமல் போகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீட்டுக் கொல்லை என்கிற ஆதித்தமிழரின் பழையமுறை மீண்டும் மலரும்.

நெல் உற்பத்தி வீட்டுக் கொல்லை அளவிற்கு சுருங்கிப் போவதால் செயற்கை தட்டுப்பாட்டை எவராலும் ஏற்படுத்த முடியாது.

நெல் ஓரிடத்திற்கு சென்று குவிவது தடுக்கப்பட்டு அனைவருக்கும் சமச்சீரான நெல் உணவு மிகக்குறைந்த விலைக்கு தொடர்ந்து கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.