08/12/2020

சாதி பெயரை கேக்காதே என கதறுபவர்கள் பின்னணி... தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை...

ST பட்டியலில் மொத்த  சாதிகளின் எண்ணிக்கை = 36...

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.

ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41.

பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகி, கொரச்சா, தெலுங்கு பட்டி செட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள 41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

DC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.

பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்க போயர், தொம்பர்கள், நோக்கர்கள், போயர்கள் , இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79.

ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான், நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது உண்டா? தமிழ்குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா? 

ஆனால் இங்கு மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும், மற்றும் பிற மொழியினரும் இங்கு இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.

இது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இதை பற்றி யாராவது இந்த நிலத்தில் பேசியது உண்டா?

இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.  ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல பொது வெளியில் பேசிக் கொண்டு தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.

இட ஒதுக்கீடு முறையில் தமிழ் சாதிகளை விட பிற மொழி சாதிகள் தான் அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதை கேட்க யாருக்கு தைரியம் உள்ளது??

இங்கு தான் தமிழ் சாதிகளுக்குள் அடித்து கொள்வதற்கு மட்டுமே நேரம் உண்டு.

இத்தனை உரிமைகளையும், அதிகாரத்தையும், பலன்களையும் பிற மொழி சாதியினருக்கு கொடுத்தவர்கள் திராவிடர்கள்தான்.

திராவிடர்கள்தான் இத்தனை பிற மொழி சாதிகளை இங்கு இடம் பெற செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை பிற மொழி சாதியினரும் அனுபவிக்க காரணமானவர்கள்.

இந்த மண்ணில் திராவிட_ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்க தான் செய்யும். இதற்கான ஒரே தீர்வு மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு. 

சட்டநாதன் அறிக்கை போல.. நாம் மக்கட்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டால் இங்கு பிற மொழி சாதியினர் பயன்பெறும் அளவு குறையும்‌‌.

தமிழ் குடிகள் ஆதரவு கொடுங்கள். இல்லை எனில் இந்த நிலத்தை பிற மொழி சாதியினர்  ஆக்கிரமிப்பு செய்வது உறுதி. பாதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். இழந்தவற்றை மீட்க, உரிமையை வெல்ல, நிலத்தை காப்பாற்ற, அதிகாரத்தை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.