27/01/2021

கடவுள் உண்டா இல்லையா?

 


பேய் உண்டா இல்லையா?

மறுபிறவி உண்டா இல்லையா?

விதி என்பது எது?

தலையெழுத்து நம் தலையில் எங்கு உள்ளது?

நிம்மதி எங்கு உள்ளது?

மகிழ்ச்சியின் திறவுகோல் எது?

வாழ்க்கை எங்கு தொடங்குகிறது?

வாழ்க்கை எங்கு முடிகிறது?

நிலையான பொருள் எது?

அறிவு என்பது யாது?

பொருள் மட்டும் தான் வாழ்க்கையா?

நம்மால் நிகழ்காலத்தில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை?

மழலையின் மொழி எது?

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?

இப்படிப் பல புதிர்களுக்கான பதிலை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மாணவனிடம் கேட்டேன்..

உனக்குப் புதிரான ஒன்று சொல் என்று..

அவன் சொன்னான்..

ஐயா தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் தான் புதிரானது என்றான்.

நான் சொன்னேன் நீ படிக்காமல் இருக்கும வரை அப்படித்தான் இருக்கும் என்று..

எனக்கும் நீண்ட காலமாகவே ஒரு புதிருக்கான பதில் தெரியவில்லை..

தமிங்கிலம் பேசும் இன்றைய மக்களுக்கு தாய்மொழி எது? என்பது தான் எனக்குப் புரியவில்லை?

எல்லாம் புரிந்துவிட்டால் நாம் ஒவ்வொருவருமே கடவுளாகிப் போவோமே..

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்..

இந்த எதிர்பார்ப்பில், கிடைக்கும் அனுபவத்தில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.