02/01/2021

இயற்கையான வளர்ந்த விவசாயத்தில், பொருளாதார சுரண்டல்கள், மரபுவழி விவசாய கட்டமைப்பை ஒழித்தல் போன்ற காரணங்களால் உருவான பஞ்சத்தை காட்டி...

 


நச்சு வேதி பொருள்களான உரம், பூச்சி கொல்லிகளை திணித்தார்கள்.

இந்த ஊர் பயிர்களுக்கு மாற்றாக மரபணு மாற்றிய பயிர்கள், நெல்களை தந்தார்கள். பின் விதைகளை அவர்களிடமே வாங்க வேண்டும் என்று ஆக்கினார்கள்.

விவசாயம் பெருமுதலாளிகளின் உரம், பூச்சி மருந்து, விதை, எந்திரங்களை விற்கவும் பெருமுதலாளிகள் வளர்ந்து விவசாயிகள் நலியவும் காரணமானது. இதை செயல்படுத்தும் கைக்கூலிகளாக விவசாய துறை, அரசியல் துறை இருந்தது.இந்த உண்மையை சொன்னவர் நம்மாழ்வார்.

இதை அப்படியே மருத்துவ துறையில் பொருத்தி பார்க்கலாம்.

மக்கள் இயற்கையில் நோய் எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளார்கள் 

வறுமை, தவறான வாழ்வியல், உணவு இதனால் மிக சிறு பகுதி நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப்படும் மக்களை முன்னேற்ற, பாதிக்கப்படா மக்கள் போல் ஆரோக்கியமாக்க சிந்தித்தால் அது சரி.

ஆனால் பெருமுதலாளிகள் என்ன செய்கிறார்கள்?

நோயை ஊதி பெருக்குகிறார்கள். உண்மை காரணத்தை சரி செய்யாமல் மருந்துகளை இறக்குகிறார்கள். நன்றாக நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவனும் ஆரோக்கியம் இல்லாதவன் போல காட்டி அவனையும் நோயாளி ஆக்குகிறார்கள். 0.1 சத மக்களை சரி செய்வதை விட்டு 99.9 சத மக்களுக்கும் தடுப்பூசியை திணிக்கிறார்கள். மருந்துகள், ஊசிகளை ஆதரிக்க விற்க அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

இந்த செயற்கை மருந்து, ஊசிகளால் நோய்ப்பட்ட சமூகம் உருவானால் அதற்கும் சிகிச்சை செய்ய இன்னும் மருந்துகளை இறக்குகிறார்கள். விவசாயத்தை சிதைத்தது போல் மருத்துவத்தையும் சிதைக்கிறார்கள்.

சிந்தியுங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.