30/01/2021

பல காடுகளை உருவாக்கும் தனி ஒருவன் யானைகள்...

 


காடுகளின் காவலன் யானைகள்...

காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.

காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன.

தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.

யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.

யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

மழை வளம் பெற, காடுகளை பெருக்க, நம் வாழ்க்கை வளம்பட யானைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.