01/02/2021

சளி பிடிச்சா கூட மருத்துவர தேடி போக பழக்கப்பட்ட இந்த சமூகம்தான் அலோபதி மருத்துவர்களுக்கான சந்தையை உருவாக்கியது...

தேர்வு எழுத கைசட்டையை வெட்டு, தாலியை கழட்டு உள்ளாடைகளை களை என கூறிய போது ஏன் என எதிர்கேள்வி கேட்க தெரியா முதுகெல்லும்பு இல்லா மருத்துவர்களைதான் நாம் உருவாக்கி வருகிறோம்.

விவரம் அறிந்த நாள் முதல் ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் முதல் மதிப்பெண் பெரும் மாணவி/ மாணவன் நான் மருத்துவராகி சேவை செய்ய விரும்புகிறேன் என்றுதான் கூறுகிறார்.

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிறார் வள்ளுவர். 

சளி பிடித்திருக்கிறது என மருத்துவரிடம் சென்றால் மழையில் நனையாதீர்கள், தலைக்கு தன்னீர் ஊற்ற வேண்டாம் என கூறி ஒரு மருந்தை கொடுத்து சளியை அடைப்பது.

காய்ச்சல் என்றால் ஊசி போட்டு வியர்க்க வைப்பது..

தடுப்பூசிக்கு பிரச்சாரம் செய்வது.

மாதவிடாய் கோளாறு என்று சென்றால் மருந்தை கொடுத்து கொடுத்து இறுதியில் கருப்பையை கழட்டி வைத்துவிடுவது.

இப்படி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் மருந்து மாஃபியாக்களின் அடியாட்களாக வேலை செய்வதே நாகரிக மருத்துவம்.

நாட்டு மருத்துவத்திற்கு திரும்ப இது ஒரு வாய்ப்பு. கையில் வெண்ணெய்யை வைத்து கொண்டு நெய்க்கு அலைவானேன்?

சென்ற வருடம் வந்த தீரா காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் குடியுங்கள் என்று அவர்களே கூறியதை விட சான்று வேண்டுமா உங்களுக்கு?

என் தந்தை எப்போதும் ஒன்று கூறுவார்.

அவன் தரமாட்டேனு சொன்னான். நா வேணானு வந்துட்டேன் என்று

நீ என்ன எனக்கு தருவது.

உன்னதை விட மதிப்புமிக்க பொக்கிடம் என்னிடம் உள்ளது என திமிரோடு கூறி மரபுக்கு திரும்புங்கள்.

மரபுகளுக்கு திரும்ப ஒரு வாய்ப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.