04/02/2021

குடும்பம் - வேலை - கிராமம் - நகரம்...


குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகளை கிராமம் மற்றும் நகரத்தை வைத்து ஒரு பார்வை..

கிராமம்:  வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒரே தொழிலின் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்வார்கள்… ஆண்கள் தோட்ட / வயல் வேலைக்கு போறதும்.. வீட்டில் உள்ளவர்கள் அந்த விளைபொருட்களை ஒருங்கிணைப்பதிலும்.. வேளாண்மைக்கு தேவையான மாடு வளர்ப்பில் அதிகமாக பெண்களின் பங்கு இருக்கும்.. வயதானவர்களும் அவர்களால் முடிந்த வேலைகளை இந்த தொழிலை ஒட்டியே காலம் கழிப்பர்கள்.. உணவு தயாரிப்பதை பெரிய நேரமெல்லாமல் செலவிடாமல் இருப்பதை வைத்து சமைத்து உண்பார்கள்.. இதுவே மற்ற தொழில்களுக்கும் பொருந்தும்… குழந்தைகள் பெரியவர்கள் செய்யும் தொழிலை பார்ததே வளர்வார்கள் அவர்களின் விளையாட்டுகளும் அங்கு கிடைத்தவற்றை வைத்தே.. அவர்களை அறியாமலே இயற்கையுடன் வாழப்பழகுவார்கள்.. இதில் சொந்த பந்தங்களின் விழாக்களுக்கும் ஊர்/கோவில் விழாக்களிலும் அனைவரும் பங்கெடுப்பார்கள்.. வெளியூர் விழாவிற்கு மட்டுமே அனைவரும் போக மாட்டார்கள்… ஒரு தொழில் மற்றும் அதைச்சார்ந்த தொழிலை மட்டுமே செய்யும் குடும்பங்களில் மட்டுமே மரபறிவை எளிதாக கடத்தமுடியும்.. இதைதான் நம் முன்னோர்கள் அனைத்தையும் வழிவழியாக கடத்தினார்கள்...

இந்த பெண்களின் உழைப்பை தடுக்கவே இந்த தொலைக்காட்சியும் தொடர்களும் கிராமம் வரை ஊடறுத்து இப்போது இதை சிதைத்தேவிட்டது என்று சொல்லலாம்.. ஆண்களுக்கு கிரிக்கெட் என்ற விளையாட்டை வைத்து அவர்களின் உழைப்பையும் தடுத்தார்கள்.. இப்ப தெரிந்திருக்கும் ஏன் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தார்கள் என்று.. சினிமாவால் சாதிக்க முழுமையாக முடியாத்தை தொலைக்காட்சிபெட்டி கட்சிதமாக செய்தது!

நகரம்:  ஆண் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்ப முடியும்.. ஆனால் அந்த வேலையில் ஏற்படும் சலிப்பினால் தன் பிள்ளைகளை வேறு வேலைக்கு படிக்க வைப்பது என சிந்திப்பது.. வீட்டில் உள்ள உள்ள பெண்ணிற்கு கிடைக்கும் நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று இருப்பது.. அதில் வரும் விளம்பரங்களை வைத்து விட்டில் இருக்கும் கலாச்சாரத்தையே மாற்றிவிடுவது.. பிள்ளைகளை பள்ளிக்கு போய் யாருடைய வராலாற்றையோ அல்லது குடும்பத்திற்கு தேவையற்ற கணக்கு/அறிவியல்/மொழியை கற்பதே பிரதான வேலையாக இருக்கும்.. இருக்கும் மீதி நேரங்களில் நடனம் / இசை வாத்தியங்கள் / பாட்டு பாடுதல் என ஊர்பட்ட சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புதல் .. மிச்ச நேரம் கார்டுனும் அலைபேசியுமாக நேரத்தை கழிக்ககின்றன.. நண்பர்களுடன் குழந்தைகள் விளையாடும் நேரம் மிகக்குறைவு.. வீட்டில் பெரியவர்கள் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு வேலையும் இருப்பதில்லை அதனால் ஆன்மீக வியாபாரம் எளிதாக அவர்கள் மூலமாக திணிக்கப்படுகிறது தொலைக்காட்சி மற்றும் தெருவில் உள்ள கோவில்களின் வழியாக.. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் பயணித்தால் எப்படி ஒற்றுமையாக வாழமுடியும் .. இந்த வாழ்வியலில் யார் தான் செய்யும் வேலையை தன் பிள்ளைக்கு கடத்துகிறார்கள் என்று பாருங்கள் மிகக்குறைவு! இது ஒரு வகை குடும்ப வாழ்வியல் சிதைப்பு.. அனைவரையும் இயற்கையாக உள்ள வாழ்ககையை தடுத்து செயற்கையான வாழ்ககை முறையை திணித்தல்… இது தவிர பத்திரிக்கைகளையும் / ஊடகங்களையும் பார்க்கும் பெரியவர்கள் யாருக்கு அதை கடத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை.. சொந்த பந்தங்களின் விழாக்களுக்கு இந்த நகரத்தில் இருப்பவர்களின் பங்களிப்பை பாருங்கள், காரணங்கள் வேலைப்பளு / பயணிக்கமுடியாத நிலை / பணமில்லாமை.. இவை படிபடியாக குறைந்துகொண்டே வருகிறது, இது ஒரு வகை குழுக்களாக வாழ்ந்தவர்களை பிரித்தெடுப்பது..

இதற்குதான் கல்வி என்ற மாயை உங்களுக்கு வலிந்து கொடுக்கப்பட்டது… உங்களை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்த.. 

தற்சார்பு_வாழ்வியல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.