04/05/2021

பிரம்மத்தை நோக்கி - 2...

 


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்கு பின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கிய பின் உடலை எரித்து சாம்பலாக்கிய பின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே, அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வு தான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ...

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.