11/06/2021

தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...

 


மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது.

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை இது தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.