தமிழர்களின் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய படைகளால் கொல்லப்பட்டாலும், இறுதியாக வென்றார்கள்..
தமிழின எழுச்சியை சகிக்காத திராவிடர் தந்தை கன்னட ராமசாமி வெறிபிடித்து சாவி இதழுக்கு அளித்த பேட்டி. (ஏப்ரல் 11,1965)..
சாவி : அந்த காலத்தில் இந்தியை எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினீர்கள். இப்போது சும்மா இருக்கிறீர்களே?
ஈ.வெ.ரா: அப்படியா. மன்னிக்க வேண்டும். இந்தி இப்போ எங்கே இருக்கிறது?
சாவி: இந்தி தான் ஆட்சிமொழியாக வந்துவிட்டதே?
ஈ.வெ.ரா: உனக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு ஆட்சிமொழி இருக்க வேண்டும் தானே? இந்திக்காரன் ஆங்கிலத்தை இழிவா நினைக்கிறானே, தமிழ்நாட்டுக்காரன் சொன்னால் நடக்குமா? அதுதான் மக்களாட்சியா?
சாவி : ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தி வரத்தானே போகிறது?
ஈ.வெ.ரா: அப்படியா? ஒருநாளைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் சாகத்தானே போகிறோம். அதற்காக இப்போதே கிணற்றில் விழுவானா? அப்படியே இந்தி வந்தால் உயிரோடு இருந்தால் எதிர்க்க போகிறவன் நான் தானே?
சாவி: இந்தி வந்தால் நாம் இரண்டாந்தர குடிமகனாகி விடுவோமே?
ஈ.வெ.ரா: இந்தி வந்தால் நீ இரண்டாந்தர குடிமகன் ஆகிவிடுவேன் என்றால், ஆங்கிலம் வந்தால் இந்திக்காரன் மூன்றாந்தர குடிமகனாகி விடுவேன் என்பானே?
சாவி : மும்மொழி திட்டப்படி நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே?
ஈ.வெ.ரா: சரியா போச்சு. ஏதாவது ஒரு அயல்மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தியாக இருந்துவிட்டு போகட்டுமே?
சாவி: இந்தி கற்க கட்டாயப்படுத்தினால்?
ஈ.வெ.ரா: அப்ப பார்த்துக்கலாமே?
சாவி: நடுவண் அரசில் இந்தி கற்க கட்டாயப்படுத்துகிறார்களே?
ஈ.வெ.ரா: படித்துவிட்டு போயேன். அவன் காசிலே இன்னொரு மொழியை தெரிந்து கொள்வது நல்லது தானே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.