04/09/2021

அதிமுக வின் நியூஸ் J & பாலிமர் தொலைக்காட்சி தொடர்பு...

 


News J சேனலை Polimer Samachar என பெயர் மாற்றம் செய்ய பாலிமர் குழுமத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது ஒளிபரப்பு துறை அமைச்சகம்...

News J அதிமுக சேனல் , அதுக்கும் Polimer க்கும் என்ன சம்பந்தம் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அதிமுகவில் இருந்து TTV தினகரன் பிரிந்த போது , Jaya TV சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு சேனல் இல்லாமல் போனது.

அப்போது , சேனல் உடனடியாக ஆரம்பிக்க நினைத்த போது அதிமுகவுக்கு உதவிக்கு வந்தது பாலிமர்.

தன்னுடைய Polimer Kannada லைசன்ஸை News J என பெயர் மாற்றம் செய்து அதிமுகவுக்கு சேனல் ஆரம்பிக்க உதவியது, பாலிமர் குழுமம். (இவனுங்க தான் நட்டநடுநிலை - நம்புங்க). 

சேனல் நடத்துவது அதிமுக என்றாலும், சேனல் லைசன்ஸ் பாலிமரினிடையது.

அதிமுக கட்சி நிர்வாகிகள் Mantaro Network என்ற பெயரில் ஆரம்பித்த நிறுவனம், டிசம்பர் 2020 இல்தான் News J2 என்ற சேனலுக்கு லைசன்ஸ் பெற்றிருக்கிறது.

இப்போது பாலிமர்...

News J வின் பெயரை Polimer Samachar என மாற்றுவதை அடுத்து, News J2 லைசன்ஸ் News J என மாற்றப்பட்டு லைசன்ஸ் & ஒளிபரப்பு என மொத்தமும்ம் Mantaro Network நிர்வாகத்தின் கீழ் போகும்.

அல்லது, எளிதாக வேலையை முடிக்க வேண்டும் என நினைத்தால் News J சேனல் News J2 என பெயர் மாற்றம் காணும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.