19/10/2021

ஆதி தென்னிந்திய மரபணு - ANCIENT SOUTH INDIAN DNA...

 


மனிதர்களுக்கு வணக்கம் ! தலைப்பை பார்த்தவுடன் புரிந்திருக்கும் இது மரபணு சம்பந்தப்பட்ட மிக முக்கியமான தகவல் ! 

ஆம் தென்னிந்தியாவில் இருக்கும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்தான் ! கடைசி வரை படியுங்கள் ! இதன் முடிவில் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும் !

சரி விஷயத்திற்கு வருவோம் ! 

முதலில் உலக அளவில் மனித இனத்தை உருவத்தைக் கொண்டு இனம் பிரிப்போம் !

மரபியல் ஆராய்ச்சிகள் தேடுதல்கள் வலுப்பெற்ற 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் மனித இனங்களின் உருவ அமைப்பை வைத்து சில பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். இந்தப் பிரிவுகளுக்குள்ளேயே உலகின் மொத்த மனித பிரிவுகளையும் உள்ளடக்கினர். அவை 

1.வெள்ளை காகேசியன்

2.மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்

3.நீக்ராய்டு கறுப்பு

முதலில் இந்த மூன்று பிரிவுகள் தான் இருந்தன !

தென்னிந்தியாவில் பழங்குடிகளும் சாதியும் என்ற நூலை எழுதிய மரபியல் ஆராய்ச்சியாளர் எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியர்களை நீக்ராய்டு கறுப்பு என்ற மூன்றாவது இனத்தில் சேர்த்தார்.

ஆனால் தென்னிந்தியர்களுக்கு நீக்ரோ இன மக்களைப் போன்ற சுருட்டை முடியும் தடித்த உதடுகளும் இல்லை என்பதைத் தாமதமாகக் கண்டு கொண்டவர் பின் புதிய பிரிவொன்றினை நீக்ராய்டு பிரிவின் உட்பிரிவாக்க உருவாக்கினார் அதன் பெயர் ஆஸ்ட்ராலய்டு !

ஆஸ்ட்ராலாய்டு என்ற புதிய பிரிவை நீக்ராய்டு பிரிவின் உட்பிரிவாக்கி அதில் தென்னிந்தியத்களைச் சேர்த்தார். பின்னர் ஆஸ்திரேலியப் பழங்குடிகளையும் இதில் இணைத்தனர் !

இப்போது தென்னிந்தியர்கள் எல்லாம் நீக்ராய்டு உட்பிரிவை சேர்ந்த ஆண்ட்ராலய்டு என்று நினைப்பீர்கள் ! அதுதான் இல்லை 1889 ல் ஒரு திருப்பம் ஏற்ப்பட்டது ! 

1.1889 இல் ரெட்ரிச் வாசல் என்ற ஆய்வாளர் இதை ஏற்க மறுத்து தென்னிந்தியர்கள் திபெத்திய மக்களின் உருவமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்கள் மங்கோலாய்டு பிரிவினர் என்றார்.

2.ஜோசப் கெனின் என்ற மரபியல் ஆராய்ச்சியாளர், இதையும் ஏற்க மறுத்தார். தென்னிந்தியர்கள் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மற்ற உலக இனங்களை விட தனித்தன்மையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதால் அவர்களை நீக்ராய்டு பிரிவில் வேறு ஒரு உட்பிரிவு ஏற்படுத்தி இணைக்க வேண்டும் என்றார். அதை

அ.சுருள் முடியுடைய நீக்ராய்டுகள்

ஆ.சுருள் முடி இல்லாத நீக்ராய்டுகள்

என வகைப்படுத்தி அதில் தென்னிந்தியர்களை சேர்த்தாலும், தமிழினத்தை சேர்க்க முடியவில்லை.

3.டார்ல்டன் ஸ்டூன் என்ற ஆய்வாளர் தென்னிந்தியர்கள் காகேசியர்கள் என்ற பிரிவில்தான் அடக்கப்பட வேண்டும் என்றார்.

இப்படி ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடிய தென்னிந்திய மரபணு குழப்பத்திலேயே இருந்தது ! இது மட்டுமா அடுத்து இன்னுமொன்று உள்ளது ! அதையும் பார்த்துவிடுவோம் !

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்ததற்காக "டார்வின் புல்டாக்" என்று அழைக்கப்பட்ட தாமஸ் கக்சி 1976 இல் ஜந்தோக்ராய்டு என்ற புதிய பிரிவை உருவாக்கி உலக மக்களை நான்காக வகைப்படுத்தினார்.

1.ஜந்தோக்ராய்டு

2.வெள்ளை காகேசியன்

3.மஞ்சள் நிற ஆசிய மங்கோலாய்ட்

4.நீக்ராய்டு கறுப்பு

ஜந்தோக்ராய்டு உட்பிரிவுகள் :

அதிக வெள்ளை நிறம் கொண்டவர்கள் (fair white) அதிக கறுப்பு நிறம் கொண்டவர்கள் (dark white) என்று பிரித்து இந்த கருப்பு வெள்ளை பிரிவுக்கு மெலனோ கிராய்க் என்று பெயரிட்டார்.

இவரது இறப்புக்குப் பின் இவரது ஆராய்ச்சிகளைத் தீவிரமாகத் தொடர்ந்த வில்லியம் ரிப்ளி, Fair white பிரிவினரை நார்டிக் பிரிவு (Nordic race) என்றும் Dark white பிரிவினரை மத்தியதரைக்கடல் பிரிவு (Mediterranean race) என்றும் வகைப்படுத்தினார்.

இந்த மத்தியதரைக்கடல் பிரிவில்தான் தென் இந்தியர்களோடு சேர்த்து இத்தாலியர்கள் ஸ்பானியர்கள், ஜெர்மானியர்கள், ஈரானியர்கள், லெபனான், இரான், கிரேக்கர்கள் தென்பகுதி ஸ்லாப் மக்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஜார்ஜியா மக்கள் எகிப்தியர்கள் அரேபியர்கள் ஆகியோர் வகைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இறுதியாக வில்லியம் ரிப்ளி அவர்களின் மரபியல் பிரிவு கோட்பாடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு வழியா மத்திய தரைக்கடல் பகுதியில் தென்னிந்தியர்களை சேர்த்துவிட்டார்கள் ! அப்பாடா என நீங்கள் பெருமூச்சு விடுவது தெரிகிறது ! பொறுங்கள் அடுத்து ஒன்று இருக்கிறது ! 

Herbert Hope Risley என்ற பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேய மரபியல் ஆராய்ச்சியாளர், இந்திய இனங்களை பின்வருமாறு பிரித்தார் !

1.துருக்கி இரானியர் (The Turk-Iranian)

2.இந்தோ ஆரியர்(Indo-Aryan)

3.சைத்தோ திராவிடன் (Scytho-Dravidian)

4.ஆரிய திராவிடர்(Aryo-Dravidian)

5.மங்கோலிய திராவிடர்

(TheMongol-Dravidian)

6.மங்கோலாய்ட்(The Mongoloid)

7.திராவிடர் (The Dravidian)

8.The Negrito

இதுவும் சற்று குழப்பான மரபணு வகைப்பாடு போல் தெரிந்தது.

இந்திய வரலாற்றில் புரட்சிகரமான ஒரு முடிவாக இத்தனை காலம் ஐரோப்பிய அமெரிக்கர்கள் மட்டுமே இந்திய இனங்களை ஆய்வு செய்துவந்த நிலையில் 2009 இல் இந்திய அரசே இந்தியர்களின் மரபணுவை ஆராய்ந்து வகைப்படுத்த திட்டமிட்டது.

ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அரசுக்கு சொந்தமான Centre for Cellular and Molecular Biology ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக இந்தப் பெரும் ஆராய்ச்சியைத் தொடங்கியது. 

திராவிட ஆரிய சார்பு ஆய்வாளர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் இந்த மையத்தின் தலைவரான " Father of Indian DNA fingerprinting" என்று புகழப்பட்ட லால்ஜி சிங் மிக உறுதியாக இருந்தார். இவர்தான் ஆராய்ச்சியை தலைமையேறறார் !

அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஒரியா, ஹிந்தி என பல்வேறு மொழி பேசும் நடுநிலையான கொள்கை சார்பு இல்லாத ஆராய்ச்சியாளர்களை கவனமாக தேர்ந்தெடுத்து குழுவை உருவாக்கினார். தொழில்நுட்ப மற்றும் மரபியல் உதவிகளுக்காக இந்தவகை ஆராய்ச்சிகளில் புகழ்பெற்று விளங்கும் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் இந்திய அரசின் அனுமதியுடன் இணைத்துக் கொண்டது. அவை..

1.Harvard medical school

2.Harvard school of public health

3.Board institute of Harvard

4.Massachusetts institute of technology

லால்ஜி சிங் தலைமையில் குமாரசாமி தங்கராஜ் என்ற தமிழரின் வழிகாட்டுதலில் ஆராய்ச்சி தொடங்கியது.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தியாவில் இரண்டு தனித்தன்மை உடைய மரபணு வகைகள் கண்டறியப்பட்டன.

1.ஆதி வட இந்தியா (ancestral North India)

2.ஆதி தென்னிந்தியா(ancestral South India)

இதில் ஆதி தென்னிந்திய மரபணு காலத்தால் முற்பட்டது என்ற முடிவு கிடைத்தது ! அனைத்து இந்திய குடிமக்களையும் இந்த இரண்டு பிரிவில் வகைப்படுத்தினர்!

கலப்பினம்...

1.ஆதி வட இந்திய மரபணுவில் ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு குறைவாக இருந்தது.

2.அதேபோல் ஆதி தென்னிந்திய மரபணுவில் ஆதி வட இந்திய மரபணு மூலக்கூறு குறைவாகவே இருந்தது.

அவர்களின் ஆய்வின் முடிவின்படி ஆதி வட இந்திய கூறு ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் ஐரோப்பியாவில் பரவலான மக்களிடமும் காணப்படுகிறது.

அந்தமான் நிக்கோபாரிலும் கூட மரபணுக்கள் பெறப்பட்டது. அந்தமான் மக்கள் தென்னிந்திய மரபணுவோடு நெருங்கியிருந்தனர்.

சரி இந்த இந்த ஆதி தென்னிந்திய மூலக்கூறு உலகில் யாரோடு தான் ஒத்துப் போகிறது ! இதன் மூலக்கூறு எங்குதான் உலகில் உள்ளது !? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால் நீங்கள் உண்மையை உணர வேண்டிய நேரம் இது ஆம் , ஆதி தென்னிந்திய மரபணு மூலக்கூறு உலகில் எங்குமே காணப்படவில்லை அது தனித்து நின்றது என ஆராய்ச்சி முடிவுகள் வந்ததன !

இப்போது கூறுங்கள் தென்னிந்திய மூலக்கூறு யார் !? உங்கள் மரபணுக்களை உலகளாவிய வல்லாதிக்க சக்திகள் குறிவைக்க காரணம் என்ன!? உங்களை ஏன் அனைத்து மரபணு பிரிவும் சொந்தம் கொண்டாடின !? ஏன் நீங்கள் தனித்த மூலக்கூறு என சொல்ல தயங்கின !?யூனியன் ஆஃப் சவுத் இந்தியாவுடன் ஐரோப்பிய இணைப்பு என்ற அரச குடும்ப திட்டம் ஏன் உங்களோடு சொந்தம் கொண்டாட இப்படியான கட்டமைப்பை அமைக்கின்றன!? இந்த உறவாடி கெடுத்தல் என்பது ஏன் !?

தனித்து நின்ற மூலக்கூறு யார் கொடுத்தது !? எங்கிருந்து வந்தோம் !?

(மீண்டும் சொல்கிறோம் பெரும்பாலன ஒத்த மரபணு உட்பிரிவை கொண்ட மனிதர்களுக்கும் தனித்து நின்ற மரபணுவை சேர்ந்தவர்கள் மனிதர்களுக்கு வணக்கம் என சொல்லுவது ஏன்!? என்ன தொடர்பு !? ) யார் நீங்கள் !?

சிந்தனை ஓட்டத்தை தட்டி விடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.