11/10/2021

நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் மனம் எங்கே இருக்கிறது...

 


உங்கள் உடல் மனமற்ற நிலையில் அப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது..

உங்கள் உடல் உண்ட உணவை ஜீரணம் செய்கிறது..

தேவையில்லாத கழிவுகளை வெளியே தள்ளி விடுகிறது..

இதற்கு உங்கள் மனம் தேவை இல்லை மனதின் உதவி தேவையில்லாமலே...

உடல் தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு புத்திசாலித்தனம் உடையது...

தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் மனம் செயல்படுவதை கவனியுங்கள்...

நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அதை எப்படி ஜீரணிக்க வேண்டும் என்று உடல் மனதைக் கேட்பதில்லை...

அந்த வேலையை உடல் மிகச் சுலபமாக செய்து கொண்டு இருக்கிறது..

இந்த உடல் காற்றிலிருந்தும் தனக்கு தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்ளதெரிந்திருக்கிறது..

மனம் என்ற ஒன்று இல்லாமல் இந்த மரங்கள் செடிகள் விலங்குகள் எல்லாம் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன...

வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தான்தான் காரணம் என்று மனம் சொல்லிக் கொள்கிறது..

புல் மீண்டும் தானாகவே வளருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.