15/10/2021

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார்...

 


நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?

தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி..

ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே. அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே. அதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே.

இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே.

இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயூடு படித்திருக்க மாட்டாரா?

நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவது தானே..

சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஈ.வே. ராமசாமி நாயூடு ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை?

நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயூடு கொடுத்திருக்கலாமே.

இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய நோக்கம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன?

தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள் தானே இந்த பகுத்தறிவுவாதிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.