வரலாற்றில் கோலின் முக்கியத்துவம்...
கோவிலின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சங்க காலத்து இலக்கியங்களில் ஆடிரை கவர்தல் என்ற வார்த்தைகள் வரும்.
இந்த ஆடிரை கவர்தல் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் ஆடுகளை கவர்தல் என்று பொருள்.
உதாரணமாக இன்றைய காலத்தில் மிகப்பெரிய செல்வமாக மதிப்பது தங்கத்தை தான், ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஆட்டு மந்தைகளை தான் மிகப்பெரிய செல்வமாக கருதினார்கள்.
அப்படி ஒன்றை தான் ஆடிரை கவர்தல் என்கிறது தமிழ் இலக்கியம் கவர்தல் என்பதற்கு கூர்ந்து கவனிப்பது என்று கூட அர்த்தம் உள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்வையால் கவர்ந்தான் என்பது கூட இப்படி தான்.
ஒரு நாட்டின் மீது அண்டை நாடு படையெடுத்தது என்றால் அண்டை நாட்டின் மிகப்பெரிய சொத்தான ஆட்டு மந்தைகளை தன்னுடையதாக்கி கொள்வதை தான் மிகப்பெரிய சொத்தாக எண்ணியுள்ளனர்.
அப்படி தனது ஆட்டை கவர்ந்து பாதுகாத்து கொள்வதை தான் ஆடிரை கவர்தல் என்று குறிப்பிடுகிறது சங்க கால இலக்கியம்.
மற்றுமின்றி ஆட்டிடையன் [ஆடு மேய்ப்பவன்] கையில் கோலை வைத்தது தமது ஆட்டை பாதுகாப்பான்.
இப்பொழுது பாருங்கள் அரசனுக்கு கோலன் என்ற வார்த்தையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை இல்லையென்றாலும் கூட கோலன் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் அரசன் தான்.
இதை வைத்து தான்...
கோல் = கோன்மை
செங்கோண்மை கொடுங்கோண்மை என்பதெல்லாம் வந்தது.
உதாரணத்திற்கு நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை கொடுங்கோலன் ஆட்சி.
இந்த கொடுங் கோலன் என்ற வார்த்தையை சிந்தித்தது உண்டா ?
நாம் கொடுங் மன்னனின் ஆட்சி என்று தானே கூற வேண்டும் ஏன் கொடுங் கோலன் ஆட்சி என்று சொல்லுகிறோம்..
காரணம் இது தான் கோலன் என்றால் அரசன் என்று பொருள்.
[இயேசு நாதரும் முஹம்மது நபியும். ஆடு மேய்த்துள்ளார்கள் அவர்கள் இருவருமே ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள்].
அடுத்த விஷயத்தை பாருங்கள்..
மகுடம் சூடுதல் அரசனுக்கான அடையாளம்..
கோல் நீதிக்கான அடையாளம்..
அதனால் தான் அன்றைய காலத்து அரசர்கள் நான் அரசன் என்பதற்க்காக மகுடம் சூடி கொள்வதும்..
நான் நீதியானவான் என்பதற்க்காக கையில் கோலை வைத்து இருந்தார்கள்..
அதாவது நான் நீதியான அரசன் என்றால் கையில் கோலையும் தலையில் மகுடத்தையும் வைத்து இருக்க வேண்டும் என்று அடையாளம்..
முடியும் கோளும் தான் மன்னவனின் அடையாளம், அதன் ஒரு பகுதி தான் முடிசூடா மன்னன்...
ஆன்மீகவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலரது கைகளில் இந்த கோல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்..
ஜெகத் குரு முதற்கொண்டு சங்காராச்சார்யா மற்றும் காஞ்சி சங்கராச்சார்ய வரைக்கும் ஏன் குட்டி சாமியார் வரைக்கும் இந்த கோல் கைகளில் வைத்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இதற்கு நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ?
லோகத்தில் பிராமணன் அல்லாத உள்ளவா அனைவரையும் தாம் தான். ஆட்சி செய்கிறோம் என்று அர்த்தம்.
அரசன் கைகளில் கோல் இருப்பது நீதிக்கான அடையாளம் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா..
இவர்கள் கைகளில் இந்த கோலில் பெயர் என்ன தெரியுமா ?
தண்டம் என்பார்கள்..
தண்டம் என்பதற்கு மறைமுக அர்த்தம் தண்டனை வழங்குவது, அதாவது பிராமணன் அல்லாதவருக்கு நான் தான் ஆட்சியாளன் அவனுக்கு தண்டனை வழங்கவே இந்த தண்டத்தை [கோலை] வைத்துள்ளேன் என்பதாக அர்த்தம்..
நேரடியாக கோல் என்றால் உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேட்டு விடுவார்கள் என்பதற்க்காக தண்டம் என்கிறார்கள்.
இதற்கு இன்னும் ஒரு உதாரணம் கூட சொல்லலாம்...
இன்றைக்கு போலீசிடம் எவ்வளவு தண்டம் அழுத என்று வாய் வார்த்தைக்கு அர்த்தம்..
போலீசிடம் தண்டனை பணமாக எவ்வளவு கொடுத்த என்பதே பொருள்..
கோலன் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்..
அன்றைய காலத்து வாலிபர்கள் வித்யாசமாக ஆடை அணியும்பொழுது என்னடி இது கோலம் என்பார்கள், அதாவது அரசன் தான் மற்றவரை விட வித்யாசமானம் ஆடை அணிபவன்.
கோலன் என்பது அரசன்
கோவில் என்பது அரசவை
கோல் என்பது நீதிக்கான அடையாளம்
இந்த மூன்றையும் ஆரியர்கள் தங்கள் வசமாக்கி கொண்டனர்..
கோலனை மறைத்து விட்டார்கள்..
கோவிலை கடவுளின் இடமாக மாற்றிவிட்டார்கள்..
கோலை யும் அவர்கள் வசமாக்கி மறைமுகமாக நீதியை நிலை நாட்டும் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதாகவே அர்த்தம்..
உண்மையில் பாரம்பர்ய அடையாளம் அழித்தொழிக்கப்பட்டு கொண்டுள்ளது....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.