முதலில் இந்த வார்த்தையை படிக்கும் பொழுது முகம் சுளிப்பது போன்று இருந்தாலும் இதன் உண்மையான வரலாற்றை படித்தால் அப்படி தோன்றாது...
அந்த கேட்ட வார்த்தை தேவ...ர்....அ.....டியாள்.. என்று சொல்லும் வார்த்தை..
முதலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கோவில் பணிக்காக அன்றய காலத்தில் தமது பெண் பிள்ளைகளை நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது இவர்களை தேவரடியார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள்..
தேவன் + இறைவன்... அடியார்கள் + அடிமைகள் அல்லது தேவதாசி..
[தேவ +இறைவன் + தாசி =அடிமை] இறையடிமை…
இப்படித்தான் இவர்களை அழைத்து வந்தார்கள் வரலாற்றில் இந்தியாவில் சில மன்னர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் பொழுது இந்த தேவடியார்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால்..
எந்த அளவிற்கு இந்திய வரலாற்றில் இவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக கருதப்படுள்ளார்கள் என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும்...
ஆனால் பிற்காலத்தில் கோவில் கருவறையில் உள்ள புரோகிதர்களால் காம பசிக்கு இரையாகி போனார்கள் இவர்கள்..
அதனால் இவர்களை தேவடியார்கள் என்ற சொல் பிறந்து இன்று கேவலமானதொரு சொல்லாக மாறிவிட்டது...
இனிமேல் இந்த வார்த்தையை யாராவது திட்டுவதற்கு உபயோகித்தால் இந்த வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்...
குறிப்பு : இந்த பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் இருந்தது என்று நினைக்க வேண்டாம் உலக வரலாற்றில் பல இடங்களில் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.