1800 களில் ஆரிய பிராமண அட்டூழியங்கள் பெருவாரியாக நடந்து கொண்டு இருந்த காலகட்டம்...
தமிழகத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் மட்டுமே எதிர்த்துக்கொண்டு இருந்த நிலை அதிலும் பலரை மிரட்டியும் கொலைசெய்தும் வந்தது பிராமணியம்.
இக்காலகட்டத்தில் தான் .இவர்களால் தாழ்ததப்பட்டவன் என்ற பிரிவில் இருந்து ஒருவர் உருவாகிறார்..
முதலில் இவருக்கும் பல எதிர்ப்புகள் மிரட்டல்கள் வந்தது..
பின்னர் தான் முடிவெடுத்தார் மதம் மாறவேண்டும் என்று ...
இந்த பிராமணிய கொடுமையால் புத்த மதத்திற்கு மாறினார்..
இன்னும் பறையர் இனத்தவர்களை மிகவும் கேவலமாக நடத்திய பிராமணர்களை எதிர்க்க 1894 ல் பறையர் மகாஜன சபா என்ற சங்கத்தை உருவாக்கினார் இச்சங்கம் அக்காலத்தில் பெரும் மகாநாட்டை கூட்டியது அதில் இறுதியில் நடந்த தீர்மானம் பறையர் மக்களும் திராவிட இனத்தை சார்ந்தவர்களே என்றது..
இதன் பின்னரே பல தமிழ் சங்கங்கள் கூட்டமாய் ஒரு கூட்டமைப்புடன் பிராமணிய தீண்டாமைக்கு எதிராக சென்னை மாகாண அரசை அணுகியது...
காரணம் பிராமணியம் [ திராவிடர்கள் பறையர்கள் கிடையாது என்றது ]...
1907 இல் இதே மனிதர். ஒரு பைசா தமிழன்.. என்ற பத்திரிக்கையை துவங்கினார்..
இந்த பத்திரிக்கையின் நோக்கம் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்ப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது..
உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
தமிழகம் மட்டுமில்லாமல் அயல் நாடுகளில் பத்திரிக்கை ஓஹோவென்று வளர்ந்தது. அடுத்த வருடம் ஒரு பைசா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழன் என்று பெயர் மற்றம் செய்து வெளியிட்டார்...
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவான இந்த கட்டமைப்பு இப்போது இருந்த தடம் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது எப்படி ? யாரால் ?
அது தான் பிராமணியம்..
ஆமாம் யார் மேலே சொன்ன நபர் ?
அயோத்தி தாச பண்டிதர்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.