29/11/2021

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்...

குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விடுவார்கள்..

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆரஞ்சு- குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது..

அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை- பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை- வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்- இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட் - கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.

மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி- இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்- சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்சா தாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.