19/11/2021

மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...

 


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும் என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண
ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க
ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி
குறுந்தொகை 392


இன்னாது அம்ம தோன்றல்
புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம் அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல் அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.