16/11/2021

உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு

ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.