12/12/2021

சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...

 


ஒரு முறை பல நாள் பயணமாக கிருஷ்ணன் என்பவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது காலை உணவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.

'சார், என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்று சர்வர் கேட்க,

'சூடு இல்லாத காய்ந்து போன இட்லி இரண்டும், உப்பே இல்லாத சட்னியும் கொண்டு வா" என்றார்.

அதிர்ந்த சர்வர், 'சார், இட்லி நல்ல சூடா, மென்மையாகவே கொடுக்கிறோம். அதுவும் இப்போதே கொடுக்கிறோம். காத்திருக்கக் கூட வேண்டாம். எங்கள் ஹோட்டல் சட்னியும் டேஸ்டா இருக்கும். உப்பும் அளவாதான் போடுவோம்" என்றார்.

கிருஷ்ணன் உடனே, 'தயவு செய்து நான் கேட்டபடி கொடுங்கள். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்" என்றார் பிடிவாதமாக.

உடனே சர்வரும் எப்படியோ சமாளித்து காய்ந்த இட்லிகளையும், உப்பில்லாத சட்னியையும் கொண்டு வந்து பரிமாறினார்.

'சார், வேறு ஏதாவது..." என தயக்கத்துடன் கேட்டார்.

'ஆறிப்போன காப்பி ஒன்று கொடு" என்றார் கிருஷ்ணன். சர்வருக்கு மயக்கமே வந்துவிட்டது. அதையும் சமாளித்து பரிமாறிவிட்டு, பில் கொடுக்கும்போது, 'சார், தப்பா நினைக்காதீங்க. ஏன் சார் இப்படி சாப்பிடறீங்க?" என்று கேட்டார்.

உடனே கிருஷ்ணன், 'இன்று எங்கள் திருமண நாள்... என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது... அதான்..." என்றார்...

🤣🤣🤣🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.