23/05/2022

கோவணத் திருடனின் கதை...

 


ஒரு ஊரில் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்கார திருடன் ஒருவன் இருந்தான். அவனுடைய ஸ்பெஷாலிடி என்னவென்றால், திருடப் போகிற அனைத்து வீடுகளிலும் அந்த வீட்டுக்காரனின் கோவணத்தை மட்டும் விட்டுவிட்டு மீதியுள்ள எல்லாவற்றையும் சுத்தமாகத் திருடிக் கொண்டு போவது.!

ஊர்க்காரர்கள் எல்லாம் வயிறெறிந்து அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.! ஆனால் ஒருத்தனுக்கும் அவனை அடக்கத் துணிவு வரவில்லை.!

கடைசியில் மேற்படி திருடனுக்கு வயதாகி, மரணப் படுக்கையில் இருந்தான்.!

அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவனும் ஒரு திருடன்தான். பக்காத் திருடனான அவனின் அப்பன் அவனையும் பக்காவாகத் திருடப் பழக்கியிருந்தான்.!

சாவின் விளிம்பில் இருந்த பக்காத் திருடன் அவனது மகனிடம், "மகனே, இந்த ஊர்க்காரர்கள் எல்லாம் என்னை மிகவும் மோசமான திருடன், கொள்ளைக்காரன் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்கள் வாயால் என்னை நல்லவன் என்று சொல்ல வைக்க வேண்டும்" என்று சத்தியம் வாங்கிக் கொண்டு செத்துப் போனான்.!

அதற்குப் பிறகு மகன் அவனைப் போல பக்காத் திருடனாக மாறினான். அப்பன் திருடப் போகிற இடத்தில் மானத்தை மறைக்கும் கோவணத்தையாவது விட்டு வைத்தான்.  ஆனால் இவனோ அந்தக் கோவணத்தையும் உருவிக் கொண்டு போக ஆரம்பித்தான்.!

ஊர்க்காரர்கள் எல்லாம், "இவனுக்கு அவனோட அப்பன் எவ்வளவோ மேல்.! மானத்தை மறைக்கிற கோவணத்தையாவது விட்டுவைத்தான். இவனின் அப்பன், ஆனால் இவன் அதைக் கூட உருவிக்கிட்டுப் போகிறான் பாவி பாவி!" என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இப்படியாக ஒரு பக்காத் திருடனை அவனது மகனான கோவணத் திருடன் உத்தமனாக்கினான்.!

விடியலை_நோக்கி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.