27/12/2022

இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வாசலகள் 11 வாசல்கள்...


அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில்  விளக்கமாக விவரித்து கூறுகிறார்.

(1) பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது. 


( இப்போ எல்லாம் ஹர்ர்ட் அட்டாக் வருபவர் களுக்கு maximum அபாண வாயு & மலத்துடனே  சூக்சும சரீரம் போகும் accident case இப்படியே  )


(2) பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும்  இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.


(3) பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும். 


(4) பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப்பிரியும். இவை மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும் சாப்பாட்டு ராமர்களாகவும் பிறப்பார்கள்.


(5,6) இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள்  அதிக பாவம் செய்யாத உயிர்கள். இவை மறுபிறப்பில் நற்மணத்தையே விரும்பும்...


(7,8) இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்ச்சிக்கும்....


(9,10) இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும். 


இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும்.... பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும்... குருபக்தி கடவுள்  பக்தியுடன் வாழும்...


(11)  சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபால வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். 

அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.

- அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.