01/02/2023

சிங்களாய் இருப்போம்.. நிம்மதியாய் வாழ்வோம்...

 


பையன்: எங்கேயாவது நல்ல

ஹோட்டலா போய் சாப்பிடலமா?


பொண்ணு: உன் இஷ்டம்


பையன்: சரவணபவன்?


பொண்ணு: போன மாசம்

அங்கதானே சாப்பிட்டோம்...?


பையன்: அப்போ செட்டிநாடு...?


பொண்ணு: எனக்கு புடிக்கல..

காரமா இருக்கும்


பையன்: ம்ம் கேஎஃப்சி....?


பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..


பையன்: அப்போ வேற எங்க

போலாம்னு நீயே சொல்லு


பொண்ணு: உன் இஷ்டம்...

.


பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற

எங்கயாவது போலாமா?


பொண்ணு: உன் இஷ்டம்...


பையன்: படத்துக்கு போலாமா....?


பொண்ணு: இப்போ வந்திருக்க

எல்லா படமும் பாத்தாச்சு...


பையன்: அப்போ ஏதாச்சும்

மாலுக்கு போலாமா?


பொண்ணு: வேணாம்...


பையன்: காஃபி ஷாப்....?


பொண்ணு: நான் டயட்ல

இருக்கேன்...


பையன்: அப்போ வேற என்னதான்

செய்யறது....?


பொண்ணு: நீயே சொல்லு...

.

பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....


பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல

போய் விட்டுட்டு போ..


பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக்

எடுத்துட்டு வரல... பஸ்லதான்

போகனும்..


பொண்ணு: நோ பஸ்ல வேணாம்.

ட்ரெஸ் அழுக்காகிடும்..


பையன்: அப்போ ஆட்டோ..?


பொண்ணு: வேணாம், பக்கத்துல தானே இருக்கு எதுக்கு ஆட்டோ?


பையன்: அப்போ நடந்து போகலாம்..


பொண்ணு: என்னால முடியாது,

எனக்கு பசிக்குது....


பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?


பொண்ணு: உன் இஷ்டம்...


மீ : இதை அமைதியா பார்த்துட்டு  இருந்த நான்.. அந்த பையன் கிட்ட போய்... 


இப்படியெல்லாம் லவ்

பண்றதுக்கு பேசாம சிங்களாவே  மல்லாக்க கவுந்து தூங்கலாம்...


🚶🚶🏃

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.