16/04/2023

தமிழ் புத்தாண்டு தை அல்லது சித்திரை.?

 


இத்தனை காலம் உருட்டியது போதும்! இனி யாரேனும் இந்த பொய்யான கவிதையை அனுப்பி நித்திரை சித்திரை என்று அனுப்பினால், மூக்கிலே ஒரு குத்து குத்திவிட்டு கேளுங்கள் எங்கடா பாரதிதாசன் அப்படி சொன்னார் என்று!? இது ஓர் போலி கவிதை பாரதிதாசன் எழுதவே இல்லை!!!

இளைஞர் இலக்கியம் என்னும் நூலில் திங்கள் பன்னிரண்டு என்னும் தலைப்பில் பாரதிதாசன் எழுதிய கவிதை இதோ:

சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு

     ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி

ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை

    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.


கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே

    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே

மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக

   வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.

இவ்விரு பாடலிலும் சித்திரையையே வருடத்தின் முதல் மாதமாய் கொண்டு எழுதியுள்ளார்..!

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையே உனைக்கு வருட முதல் மாதம்!!! திராவிட மாயையில் சிக்கி ஏமாறதே!!! பகுத்தறிவோடு எதையும் அணுகு! கேள்வி கேள்! பதிலை தேடு! வரலாற்றை அறி! 

உரக்கச் சொல்வோம் சித்திரையிலேயே எமது புது வருடம் தொடங்குகிறது என்று!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.