நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்..
இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்..
முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்..
பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்..
பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்..
வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்..
ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு...
இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்..

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.