13/08/2017

இதற்கு பெயர் தான் விபச்சார ஊடகம்...


அதிமுக ஓபிஎஸ்சும் டூபாக்கூர் வேலையும்...


நாம் முன்பே சொன்னது தான்...


கமலஹாசன் முழுக்க முழுக்க திமுகக்காரர்...


கமலஹாசனின் அப்பா சீனிஹாசன்  பரமக்குடியில் ஒரு கோவிலின் அறங்காவலர். கோவில் காசு அவர் கையில் புரண்டு கொண்டு இருந்தது. தினமும் கோவில் சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கமலஹாசன். பட்டைசாதமும், உண்டக்கட்டியும் இல்லேனா கமலஹாசன் இல்லை. அப்படி கோவில் சோற்றில் வளர்ந்தவர் தான்  தன்னை நாத்திகர் போல காட்டிக்கொண்டு நடிக்கிறார். இதெல்லாம் வடுக திராவிட வந்தேறிகளுக்கே கைவந்த கலை.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் திமுகக் காரன் வக்கீல். திமுக அடித்த கொள்ளை,  செய்த கொலை அத்தனைக்கும் இவர் வக்கீலாக இருந்து ஆலோசனைகள் சொல்லி, காப்பாற்றி விட்டவர்.

விஞ்ஞானரீதியாக  ஊழல் செய்வது எப்படி என்று திமுகவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர். கருணாநிதியின் கருப்பு பக்கங்கள் முழுவதும் அறிந்தவர். கருணாநிதியின் எல்லா தவறுகளுக்கும் முழு அத்திவாரம்  போட்டுக்கொடுத்து காசு சேர்த்தவர் சாருஹாசன். இது பலருக்கு தெரியாது. கருணாநிதிக்கு மாலைநேர காரோட்டியாகவும் இருந்து இருக்கிறார் சாருஹாசன்.

தமிழர்களின் கோவில்கள்  வடுக வந்தேறிகளின்  கையில் இருக்கிறது. அப்படி அந்தக் கோவில் வடுகர் சீனிஹாசன்  கையில் இருந்தது. அந்தக் கோவிலில் தேவதாசிகள் இருந்தனர். அவர்கள் சீனிஹாசன் வீட்டுக்கும் வருவார்கள். அப்படி வருகையில் அவர்களோடு  கமலஹாசனுக்கும், அவரது அண்ணன் சாருஹாசனுக்கும் தேவதாசிகளின் பரிச்சயம் ஏற்பட்டு, அப்போது பிடித்த  பெண்மோகம் தான் இப்போது வரைக்கும் தீரவில்லை ஹாசன்களுக்கு.

கமல்ஹாசனும், சாருஹாசனும் பயங்கரமான பெண்பித்தர்கள். திரையிலும் வெளியிலும் பெண்களை வேட்டை ஆடினார்கள். கட்சிக்காரர்களுக்கு பங்கும் கொடுத்தார்கள்.

'உங்கள் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்தீர்களா?' என்ற கேள்விக்கு, 'நான் ஒரு ஆணுடன் படுத்துக்கிடந்து அதை  என் கணவர் சாருஹாசன்  பார்த்து இருந்தாலும், கதவை மூடிவிட்டு கம்மென்று போய் இருப்பார் ! என்று என் மனைவி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன் ' என்று சாருஹாசன் சொன்னார். இதுதான் இவர்களின் பெண் சுதந்திர இலட்சணம். அடுத்தவனோடு/அடுத்தவளோடு படுத்துக்கொள்வது தான் சுதந்திரம் இவர்களுக்கு.

கமல்ஹாசன்  எடுத்த பல படங்கள் திமுகவின் நிதியினால் எடுக்கப்பட்டவை, திமுகவின் பின்னணி இல்லாமல் கமலஹாசன் இயங்கியது இல்லை. திமுக வோடு சேர்ந்து திட்டமிட்டு, எம்ஜிஆரை பல நேரம் ஏமாற்றி இருக்கிறார் கமல்ஹாசன்.

இராமசாமி  தொண்டன் என்று சொல்லிக்கொண்டு, தன் படங்களுக்கு சூரசம்ஹாரம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர்கள் வைப்பதும், சாதியை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, தேவர் மகன், சபாஷ் நாயுடு  என்று பெயர் வைப்பது எல்லாம்  கமல்ஹாசனின் திருட்டுப்புத்தி !

ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு, மு.க. ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்து இருப்பது எல்லாமே போலியான வேலைகள்.

கௌதமிக்கு  பிறகு பெண்டாட்டியாக இருக்க, இன்னொரு பெண் குத்தகைக்கு கிடைக்காமல் இருப்பதே, அவர் இப்போது அரசியல் பேசுவதற்கான  நேரத்தை அவருக்குத்   தருகிறது. அபப்டி இன்னொரு பெண் குத்துகைக்கு கிடைத்துவிட்டால் அவர் அந்தப்பக்கம் போய் விடுவார். அதுவரையில் பொறுத்து தான் ஆகவேண்டும்...

மேட்டுப்பாளையத்தில் சைக்கிள் பைக் மோதி விபத்து, சைக்களில் வந்த நபருக்கு கால் முறிவு...


ஆம்புலன்ஸ் வரத் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் காயமடைந்தவர் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன தான் சாதித்தது இந்த மோடி அரசு?


கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி திடுதிப்பன கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் அதனால் இனிமேல்  இந்திய ஒன்றியத்தில் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அறிவித்தார்.

ஆனால் இன்றுவரை எவ்வளவு கருப்பு பணத்தை கண்டு பிடித்திருக்கிறீர்களென்று கேட்டால் கேட்பவர்களை தேசத்துரோகிகளென்றும் பிரிவினைவாதிகளென்றும் சொல்கிறார்களே ஒழிய  எவ்வளவு கருப்பு பணத்தை மீட்டோமென்று இதுவரை அரசும் சொல்லவில்லை ரிசர்வ் பேங்கும் சொல்லவில்லை.

அதுபோக  பணமதிப்பிழப்பு (Demonetization)  நடவடிக்கையால் ஒரு நன்மையும் ஏற்படவில்லையென்று பாராளுமன்ற நிலைகுழு கடந்த மூன்று நாளைக்கு முன்னால் அறிவித்து விட்டது.  இதுபோதக்குறைக்கு தற்போது வருட வருடம் ரிசர்வ் வங்கி எடுக்கும் சிக்கன நடவடிக்கையால் மிச்சமாகும் பணத்தை (surplus money)  அரசுக்கு அது கொடுக்கும். அதன்படி 2015 வருடம் 65,896 கோடி ரூபாயும் 2016 ஆம் வருடம் 65,876கோடியும் கொடுத்திருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு வெறும் 30,659 கோடியை தான் கொடுத்திருக்கிறது. இது 2016ஆம் ஆண்டு கொடுத்ததில் பாதியளவு தான்.

ஆனால் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது நிதியமைச்சர் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கொடுக்கும் தொகை 75,000கோடியாக இருக்குமென தெரிவித்திருந்தார். ஆனால் அதில் பாதியளவுகூட கிடைக்கவில்லை. இதற்கு சரியான காரணத்தை ரிசர்வ் வங்கியும் சொல்லவில்லை. ஆனால் பொருளாதார நிபுணர்கள் தீடிரென்று நாட்டில் புழக்கத்தில் இருந்த  86% பணத்தை அரசு செல்லாது என்ற அறிவித்தபடியால் 86% புதிய நோட்டுகளை அச்சடிக்கவேண்டிய சூழல் வந்தது அதனால் இந்த வருடம் செல்வு அதிகரித்து விட்டதென்று சொல்கிறார்கள்.

ஒருபக்கம் எதற்காக இந்த நடவடிகையை எடுக்கிறோமென்று மோடி அரசு சொன்னதோ அதுவும் நடக்கவில்லை. மறுபக்கம் இந்த நடவடிக்கையால் அரசுக்கு வரவேண்டிய பணம்கிடைக்கவில்லை. ஆகமொத்தம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தவறான நடவடிக்கை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி இவர்கள் ஏன் இதை கொண்டுவந்தார்கள் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அதாவது

இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பல லட்சம்  பேருக்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது ஒரு புறமென்றால். நாட்டிலுள்ள 20 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 3.20லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது.

உதாரணமாக
அம்பானியின் சொத்துமதிப்பு 83,000கோடியும்,
லட்சமி மிட்டலின் சொத்துமதிப்பு 13,952கோடியும்
ஆசிம் பிரேம்ஜியின் சொத்துமதிப்பு 23,232கோடியும்
ஷிவ் நாடாரின் சொத்துமதிப்பு 9,088கோடியும் உயர்ந்திருந்திருக்கிறது.

ஆகவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்த கார்ப்ரேட் மோடி அரசு  என்ன சாதித்திருக்கிறதென்றால் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்கியிருக்கிறது. ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக மாற்றியிருக்கிறது.

இதுவே ’மேக் இன் இந்தியா’ திட்டம்

இதுவே ’தேசபக்தி’

இதுவே ’வளர்ச்சி நாயகன்’ மோடியின் வளர்ச்சி...

ஆகஸ்ட் 12 முதல் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை...


சனி - வாரத்தில் 2 வது சனி விடுமுறை..
ஞாயிறு, திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி
செவ்வாய் - சுதந்திர தினம்...

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்...


மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்...

வில்லியம் ஜோன்ஸ் கற்பித்த சமஸ்கிருத வரலாற்றை முறியடிப்போம்...


நரேந்திரமோடி உள்ளிட்ட பல இந்துத்துவாதிகள் சமசுகிருதத்தை இந்திய துணைக் கண்டத்தின் முதன்மை மொழியாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு தமிழ்நாடு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்மொழி என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்து வரும் வேளையில், சமற்கிருதத்தை இந்துத்துவ -தில்லி வல்லாதிக்க அரசு முதன்மைப்படுத்துவது வரலாற்று மோசடியாகும்.

முதன் முதலில் பிரித்தானிய வல்லாதிக்கம் தான் இந்த சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்து வரலாறு எழுதியது. இந்த 'சமற்கிருத' நச்சு விதையை முதன் முதலாக விதைத்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த லில்லியம் ஜோன்ஸ் ஆவார். (படத்தில் இருப்பவர் வில்லியம் ஜோன்ஸ்)

இவர் இளம் வயதிலேயே கிரேக்கம், இலத்தின், பாரசீகம், ஹீப்ரு, அரபு மொழிகளை கற்றிருந்தார். 1783 இல் கல்கத்தா நீதிமன்றத்தின் நீதியரசாகவும் பணிபுரிந்தார். அவர் இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில்  மூத்தமொழியாக சமற்கிருதத்தை கருதி வந்தார். அதன் காரணமாக சமஸ்கிருத மொழியை வங்காளப் பார்ப்பன சமஸ்கிருத ஆசிரியர் ராம்இலக்சன் கவிபூசன் என்பவரிடம் கற்றுத் தெளிந்தார்.

இவர் மேலெழுந்தவாரியாக சில சமஸ்கிருத சொற்களுக்கும், கிரேக்கமொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக கண்டறிந்து சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதாகக் கருதினார். இதன் மூலம் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பக் கோட்பாட்டை வகுத்தார். இதை 1787இல் வங்கத்து ஆசிய சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் அறிவித்தார். இந்தக் கோட்பாடு ஆரிய இன மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கவே பயன்பட்டது.

இந்தியாவிலும், செர்மனியிலும் ஆரிய இனத்தின் ஆதிக்கத்தை தூண்டியதே தவிர எந்தமொழி வரலாற்று உண்மையையும் வலுவான சான்று காட்டி வெளிப்படுத்த வில்லை.

வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக்கு, எச்.எச்.வில்சன் போன்றோர் இக்கருத்தையே அதிகமாக பேசி வந்ததால்  சமஸ்கிருத முதன்மை மொழிக்கொள்கையும், இந்தோ ஐரோப்பிய மொழிக்கோட்பாடும் இந்திய வரலாற்றை தவறாக எழுதும் நிலைக்கு கொண்டு நிறுத்தியது.

இந்திய ஆட்சித்துறைப் பணிக்கு இங்கிலாந்தில் I.C.S. படித்த மாணவர்களுக்கு இந்திய வரலாறு தேவைப்பட்டது. 1815  சேம்சு மில் என்பவர் இந்திய வரலாற்றை எழுதி வெளியிட்டார். அவரைப் பின்பற்றியே தொடர்ந்து பலரும் எழுதலாயினர்.

இந்தியர்களுள் பெரும்பாலோர் காட்டு மிராண்டிகளாக இருந்ததால் ஆரியர் வருகைக்கு பின்னரே  பண்பாடு உருவானதாக  குறிப்பிட்டனர். இதன் மூலம் தவறான இந்திய வரலாற்றுக் கொள்கை அடித்தளமிடப் பட்டது.

அது மட்டுமின்றி, மேலை நாட்டினர் ஆளுவதற்கான கொள்கை வகுப்பாளர்களாகவும் இவர்கள் விளங்கினர். சமஸ்கிருதப் பராம்பரியத்திற்குப் புறம்பான இந்த காட்டுமிராண்டிகளை மேம்படுத்த வெள்ளையர்களுக்கு பொறுப்புண்டு என்றும், பண்பாடற்ற அவர்களை நெறிப்படுத்த கீழ்த்திசை யதேச்சாதிகாரப் போக்கிலேயே (Oriental despotism) ஆள வேண்டும் என்ற ஆளுமைக் கொள்கையையும் வகுத்தனர்.

சமஸ்கிருதம் முதன்மொழி என்பதற்கு எந்த வரலாற்றுத் தரவுகளையும் தரவில்லை. அவர்கள் வேதமொழியும், சமசுகிருதமும் வேறுவேறு மொழிகள் என்பதை அறிந்திலர்.

கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முன் சமஸ்கிருதம் தொடர்பாக எந்தக் கல்வெட்டும், நாணயமும், மட்கலப் பொறிப்புகளும், முத்திரை எழுத்துகளும் கிடையாது என்பதை அறிந்திலர்.

கி.பி. 350க்குப் பிறகே சமற்கிருத இலக்கியம் பிறந்ததையும் அறிந்திலர். பிறமொழி இலக்கியத்தை தமதாக்க கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் சமற்கிருத மொழி வரலாற்றில் ஒருமொழி பெயர்ப்பு இயக்கம் நிகழ்ந்ததையும் அறிந்திலர்.

சமற்கிருத மொழியின் முந்தைய நிலை பாகதமாகும். அதன் திருந்திய நிலையே சமற்கிருதம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழும், பாகதமும் சில இலக்கண விதிகளிலும், 90% உயிர் எழுத்துகளிலும் ஒன்று படுகின்றன. அதே வேளையில், இவை இரண்டும் ஒரே விதமாக சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன.

 தமிழும், பாகதமும்- தென் மொழி, வடமொழி என்ற நிலையில் கி.பி.350 வரை தொல்லியலில் காட்சியளிக்கும் போது அக்காலத்தில் சமற்கிருதம் குழந்தையின் தவழும் நிலையில் இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உண்மை வரலாறு இவ்வாறு இருக்க சமற்கிருதம் இந்தியமொழிகளின் முதல்மொழி என்பது தவறான வாதமாகும்.

சமற்கிருதம் தமிழைப் போன்றும், பாகதத்தைப் போன்றும் அ,இ,உ, அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. கிரேக்கம், இலத்தீன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் ஆல்பா, பேத்தா அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. இவ்விரு வகை மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தில் சேராதவை என நிரூபிக்க இது ஒன்றே போதுமான சான்றாகும். வில்லியம் ஜோன்ஸ் கூறிய இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப கோட்பாடும் அவரின் கற்பனையில் தோன்றிய ஒன்றாகும்.  .ஆரியர்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்பது ஏற்க இயலாது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் உருவாகி விட்டது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர் வாழ்ந்த தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது.

உலகின் முதல் மாந்தன் பிறந்தகம் தென்தமிழகம் என்பதும்  முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ்மொழி என்பதும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்  உலகிற்கு உரத்துச் சொன்ன உண்மையாகும்.

இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து எழுதும் மரபு உடைத்தெறியப்பட வேண்டும். தெற்கிலிருந்து வரலாறு எழுதும் மரபு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் சமற்கிருத மேலாண்மைக்கொள்கை ஆட்டங்கண்டு ஓட்டமெடுக்கும்!

நூல் உதவி: வே.தி.செல்லம் எழுதிய தமிழகப் பண்பாடும் வரலாறும்...

சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...


ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது.

இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.

இந்த படம் , இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.

நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.

குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக்கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...